"வீடுகளுக்குச் சென்று வினாத்தாளை வழங்கவேண்டாம்"

அதிபர்கள், ஆசிரியர்கள் மாணவர்களின் வீடுகளுக்குச் சென்று பாடவிடயங்களையோ, வினாத்தாள்களையோ   வழங்கவேண்டாமென, இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்  விடுத்துள்ளதாக, அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் சரா. புவனேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக, நாட்டில் ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழ்நிலையில், மிக அறிவார்ந்த ரீதியில் கல்விப் புலத்திலுள்ளோர் செயற்பட வேண்டும் எனவும் அச்சங்கம் விடுத்துள்ள அறிக்கையொன்றின் மூலம் கேட்டுக் கொண்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “சில இடங்களில் அதிபர்கள், ஆசிரியர்கள், பிள்ளைகளின் வீடுகளுக்குச் சென்று இலவசமாக பாடம் நடத்துவதாகவும், வினாத்தாள்கள் வழங்குவதாகவும் தகவல் கிடைத்துள்ளது. 
“அதிபர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவரும் அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுங்கள், முதலில் உயிர் பாதுகாப்பு அதன் பின்னரே மற்றைய அனைத்தும்.
“எனவே, ஆபத்தின் ஆழத்தைப்புரிந்து கொண்டு, அனைவரும் அரசாங்கத்தின் அறிவிறுத்தல்களுக்கமைவாக செயற்படவேண்டும்” எனவும் அந்த வேண்டுகோளில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments