எச்சரிக்கை : டெங்கு பரவும் அபாயம்தென்மேல் பருவப்பெயர்ச்சி காலநிலை காரணமாக டெங்கு தொற்று பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவின் பணிப்பாளர் விசேடவைத்திய நிபுணர் அருண ஜெயசேகர தெரிவித்துள்ளார்.
மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வட மேல் மாகாணங்களில் டெங்கு பரவும் அபாயம் அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால், டெங்கு பரவக்கூடிய மாவட்டங்களில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 18,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், டெங்கு காரணமாக இதுவரை எவரும் உயிரிழக்கவில்லை என சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments