எதிர்க்கட்சிகள் தோல்விக்கு பயந்தே பாராளுமன்றை கூட்ட சொல்கின்றன ; ஜனாதிபதி காட்டம்


கொரோனா வைரஸை இல்லாதொழிக்கும் போராட்டத்தில் சகல எதிர்க்கட்சிகளும் எம்முடன் இணைந்து பணியாற்றலாம். அதை நாம் மனதார வரவேற்போம். அதற்காகக் கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீளக்கூட்டுமாறு கோருவதில் எந்த நியாயமும் கிடையாது.
எதிர்க்கட்சியினர் அரசியல் இலாபம் தேடுவதற்காகவே பழைய நாடாளுமன்றத்தை மீளக்கூட்டுமாறு வலியுறுத்துகின்றனர். தேர்தல் தோல்விப் பயத்திலேயே அவர்கள் இருக்கின்றனர்.
எனவே, அவர்களின் நோக்கங்களை என்னால் நிறைவேற்ற முடியாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீள கூட்ட வேண்டுமென எதிர்க்கட்சியில் உள்ள கட்சிகள் மற்றும் அணிகள் பல ஒன்றிணைந்து, ஜனாதிபதிக்கு கூட்டு யோசனையொன்றை நேற்று மாலை கையளித்துள்ளன.

இதில், மீண்டும் நாடாளுமன்றம் மீள கூட்டப்பட்டால் அரசுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கத் தயார் என்றும், தமது மாத கொடுப்பனவுகள் கூட வேண்டாம் என்றும் உத்தரவாதமளித்துள்ளனர்.

Post a Comment

0 Comments