சற்றுமுன்னர் வெளிவந்த தகவல் -619 ஆக அதிகரித்த கொரோனா தொற்றாளர்கள்


ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 611 லிருந்து 619 ஆக அதிகரித்துள்ளது.
இன்றையதினம் மேலும் 8 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இன்றையதினம் இரவு 10.30 மணியாகும் போது 31 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
317 கொரோனா தொற்றாளர்கள் சந்தேகத்தின் பேரில் வைத்திய கண்காணிப்பில் உள்ளதுடன் அடையாளம் காணப்பட்டுள்ள 478 தொற்றாளர்கள் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
இதேவேளை, 134 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளான 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

Post a Comment

0 Comments