(2020/04/30 ; 10:45am) வானிலை அறிக்கை


மத்திய, தென், ஊவா, கிழக்கு, சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் வட மாகாணத்தின் வவுனியா, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் மாலையில் அல்லது இரவில் மழை பெய்வதற்கான சாத்தியகூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுளள் வானிலை அறிக்கையில்,
மத்திய, தென், ஊவா, கிழக்கு, சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் வட மாகாணத்தின் வவுனியா, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ
பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது எனவும், மேல் மற்றும் தென்மாகாணங்களிலும் மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களிலும் கரையோரப் பிரதேசங்களில் மழை பெய்யலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.
அத்துடன் மழை பெய்யும் வேளைகளில் இடி மின்னல் தாக்கம் காணப்படும் எனவும் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Post a Comment

0 Comments