About Me

header ads

கொரோனா சந்தேகத்தில் முன்னாள் மாகாண சுகாதார அமைச்சர் சுபைர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில்



#மட்டக்களப்பு_போதனா #வைத்தியசாலையில்_இருந்து #தற்போது_சுபைர்_ஹாஜியார் 
#அவர்கள்_அனுப்பிய_தகவல் 
___________________________________________

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு

அன்புக்குரிய உறவுகளே கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் இந்தியாவுக்கான விஜயத்தை முடித்துக்கொண்ட நான் அதன் பின்னர் கட்டாரில் இருந்து வருகை தந்த எனது உறவினர்களுடன் சில நாட்கள் தங்கியிருந்தேன் அந்த காலப்பகுதியில் எனக்கு இருமலோ காய்ச்சல் தொண்டை நோய் இருக்கவில்லை ஆனாலும் மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டது.

இது தொடர்பில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கொரோனா சம்பந்தப்பட்ட வைத்திய பிரிவுக்கு பொறுப்பாக இருக்கின்ற வைத்திய நிபுணர்கள் ஆலோசித்தேன் தொடர்ச்சியாக எனக்கு இருக்கின்ற மூச்சு திணறல் ஆனது கொரோனா நோயுடைய தாக்கமாக இருக்கலாம் என்று பயந்தேன் அது மாத்திரமல்லாமல் தொடர்ச்சியான மூச்சு கஷ்டம் காரணமாக வைத்திய நிபுணர் குழு ஆலோசனைக் அமைவாக பலநோக்கு வைத்தியசாலையில் எக்ஸ்ரே ஒன்றையும் பெற்றுக் கொண்டேன்.

ஆனால் எக்ஸ்ரேயில் எந்தவிதமான பிரச்சினையில்லை என்று அறிந்து கொண்டேன். ஆனாலும் தொடர்ச்சியான மன அழுத்தம் வீட்டில் பாதுகாப்பற்ற சூழ்நிலை ஆதரவாளர்களின் சந்திப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு வைத்திய நிபுணரின் ஆலோசனை கனிவாக நேற்று பிற்பகல் ஏறாவூர் வைத்தியசாலை ஊடாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளேன்.

ஆகவே இது தொடர்பில் அனைவரும் அவதானமாக இருக்க வேண்டிய காலம் இது நான் குணமடைந்து வீடு திரும்ப அதிகமாக எனக்கு துவா செய்து கொள்ளுங்கள்.

அஸ்ஸலாமு அலைக்கும்

M.S.சுபைர் (BA)
#முன்னாள்_கிழக்கு_மாகாண 
#சுகாதார_அமைச்சர்

Post a Comment

0 Comments