About Me

header ads

அன்றாடம் உழைக்கும் மக்களுக்கு நிவாரணம் வேண்டும் ; மு.கா பிரதி தலைவர் ஹரிஸ்




-அபூ ஜாஸி-

அன்றாடம் உழைக்கும் மக்களின் தேவைகளை அரசு கவனத்திற்கொண்டு அவர்களின் ஜீவனோபாயத்திற்கான நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் என அரசிடம் கேட்டுகொள்கிறோம் என முஸ்லிம் காங்கிரசின் பிரதித்தலைவரும், முன்னாள் ராஜாங்க அமைச்சருமான எச்.எம்.எம்.ஹரிஸ் தெரிவித்தார்.

கொரோனா தொடர்பிலான விசேட ஊடகவியலாளர்களுடான சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார். மேலும் கருத்து வெளியிடுகையில்,
கொரோனா தாக்கத்தினை கட்டுப்படுத்தும் முகமாக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதுடன் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மற்றும் சுகாதார அமைச்சு தரும் அறிவுறுத்தல்களை பின்பற்றி ஒத்துழைப்பு நல்குமாறு நாம் மக்களை அறிவுறுத்துகின்றோம்.

இன்றைய தினம் ஜும்மாத் தொழுகை இடம்பெறவில்லை, ஐவேளை தொழுகை தடைப்பட்டிருக்கின்றது, மேலும் மக்கள் வீடுகளுக்குள் முற்றாக முடங்கிக் கிடக்கின்ற நிலைமை பெரிதும் சுமைகளை மக்கள் மீது குவித்துள்ளது. வங்கிக்கடன்கள் மற்றும் ஏனைய வழமையான மாதாந்த செளுத்துகைகளில் இருந்தும் மக்களை எதிர்வரும் ஆறு மாதங்களுக்கு விடுவிக்க வேண்டும்.

விசேடமாக தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இடம்பெற்றுள்ள படியினால் அரசியல் பிரச்சாரங்களை சமூக ஊடங்கள் பெரிதும் தவிர்ந்து இன்றைய கொடிய நோய்த் தாக்கம் தொடர்பிலாக மக்களை தெளிவு படுத்துதல் மிக அவசியமானதாகும். இதற்காக அனைவரும் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்கிறேன் எனவும் தெரிவத்தார்.


Post a Comment

0 Comments