About Me

header ads

*பொதுத் தேர்தல் தினம் ஒத்திவைப்பு?*


 *News -- 19 Mar 2020*             
கொரோனா தாக்கம் காரணமாக பொதுத் தேர்தலை ஒத்தி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

பொதுத் தேர்தலை நடத்துவதற்கான புதிய திகதி மார்ச் 26ஆம் திகதிக்குப் பின்னர் தீர்மானிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழுவில் தற்போது இடம்பெறும் ஊடக சந்திப்பின் போதே இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஏப்ரல் 25ஆம் திகதிக்குப் பின்னர் வரும் 14 நாட்களுக்குப் பின்னர் வரும் ஒரு நாளில் தேர்தல் இடம்பெறும். 

தேர்தல் ஆணைக்குழுவில் உள்ள மூவரும் இணைந்து இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேஷப்பிரிய சுட்டிக்காட்டியுள்ளார். 

தேர்தல்கள் சட்டத்தின் பிரகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் பிரகாரம் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Post a Comment

0 Comments