About Me

header ads

முஸ்லிம் காங்கிரசின் தோற்றத்திற்கு முந்திய நிலைமையே இன்றும் உள்ளது : சேகு இஸ்ஸதீன்



முஸ்லிம் காங்கிரஸின் கள அரசியலுக்கு முன்பிருந்த கால சூழ்நிலையே இன்று முஸ்லிம் சமூகத்தில் காணப்படுகின்றது என்று முன்னாள் முகாவின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான வேதாந்தி சேகு இஸ்ஸதீன் கருத்து தெரிவித்தார்.

முஸ்லிம் சமூகம் அரசியல் ரீதியான தெளிவான சிந்தனைகளை பெற வேண்டுமென்பதற்காகவும் அதற்கான அடையாளத்தை ஏற்படுத்தி விட வேண்டுமென்பதற்காகவுமே சுயநலங்களை கடந்து முஸ்லிம் காங்கிரஸை தோற்றுவித்தோம்.  இதில் தன்னலமற்றவர்களே அதிகமாக கட்சியில் தானாக முன்வந்து இணைந்து   கொண்டதுதான் அக்காலங்களின் சிறப்பாகும்.

இப்படியான காலகட்டத்தில் உருவாக்கப்பட்ட கட்சி அஷ்ரபின் மறைவுக்கு பிற்பாடு பல பரிமாணங்களை தன்னுள்ளே ஏற்படுத்தியிருந்தது. இதன் விளைவுகள் அதனை விட்டு பிரிந்த கிளைக் கட்சிகளும் கூட சுயநலன்கள் சார்ந்தே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது.

முஸ்லிம்களுக்கென்று ஒரு கட்சி தேவை என்ற மனநிலை  எல்லோர் மனங்களிலும் ஒங்கி ஒலித்தது ஆனால்  இன்று தனக்கு ஒரு கட்சி தேவை  என்பதுவே இன்றைய யதார்த்தமாகவுள்ளது.

இந்த யதார்ததத்தின் காரணமாகவே முஸ்லிம் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கடசிகளின் எதிர்காலம் கேள்விக்குறியை தாங்கி நிற்கின்றது. இது நமது சமூகத்திற்கு பெரும் ஆபத்தான களநிலவரத்தை ஏற்படுத்தியுள்ளது. இதை உணர்ந்தே நான் முகாவின் முன்பிருந்த காலம் என கூறுகின்றேன்.

அன்று கட்சிகளைத்தாண்டி நானும் தலைவர் அஷ்ரப் அவர்களும் சமூகம் நோக்கிய எமது பயணங்களை தொடர்ந்தோம். அதன் பெறுபேறுகள் அதிகமாகவே எமது சமூகத்திற்கு கிடைக்க காரணமாக அமைந்தது என்றே கூறலாம்.   இப்படியான துார  சிந்தனையுடைய அரசியல்வாதிகள் தற்காலத்தில் இருக்கின்றார்களா? என்பது தொடர்பான அவதானிப்புக்களை நான் தொடர்ச்சியாக மேற்கொள்வதுண்டு. பல அரசியல் வாதிகளோடு மனம் திறந்து பேசியும் வருகின்றேன் சிலருக்கு வாய்ப்புகள் கிடைத்தும் கூட அச் சந்தர்ப்பத்தை தவறவிட்டவர்கள் ஏராளமாகவுள்ளனர். சிலர் இன்னும் வாய்ப்புகளுக்காக காத்திருக்கின்றனர்.  பாராளுமன்ற உறுப்பினர்கள்    ஒரு சிலர் சமூகத்திற்காக தனது  பதவிகளை தூக்கியெறிந்தவர்கள் என்ற பெருமையையும் பெற்றுள்ளனர்..

இதில் முகாவின் ஆரம்ப கால சிந்தனையுடன் ஒத்த ஒருத்தராக ஹரீஸ் எம்.பியை அம்பாரை மாவட்டத்தில் அதிலும் தலைவர் அஷ்ரப் அவர்களின் மண்ணிலிருந்தே என்னால் பார்க்க முடிகிறது. மண்ணை பாதுகாப்பதற்கான போராட்டம்,சமூகத்தை பாதுகாப்பதற்கான போராட்டம் என தொடர்ச்சியான நெருக்குவாரங்களுக்குள் அதிகமாக மாட்டிக் கொண்டு தன்னந்தனியாக போராடி வருவதென்பது இலகுபட்ட காரியமல்ல.

இப்படியான சமூக நோக்குள்ள ஒரு அரசியல் பிரமுகரின் கரங்களை பாதுகாப்பது என்பது சமூகத்தின் பாரிய பொறுப்பாகும். என்பதுவே எனது அனுபவத்தின் பகிர்வாகும் என்றார் வேதாந்தி சேகு இஸ்ஸதீன்

Post a Comment

0 Comments