About Me

header ads

மக்கள் பொறுப்புணர்ச்சியுடன் செயலாற்றவேண்டும் ; CASDRO பொதுச்செயலர்


துறை சார்ந்த நிபுணத்துவம் கொண்டவர்களை தவிர்த்து, மனம் போன போக்கில் மக்கள் தலைவர்களை தீர்மானிப்பதே முஸ்லிம் சமூகத்தின் அரசியல் பின்னடைவிற்கான பிரதான காரணியாகும் என CASDRO-சமூக நடவடிக்கைகள்,துறைசார் அபிவிருத்தி மற்றும் ஆராய்ச்சிக்கான மையத்தின் பொதுச்செயலாளர் ஏ.எல்.ரமீஸ் தெரிவித்தார். 

மக்கள் தமது அரசியல் தலைமைகள தீர்மானிக்கும் சக்தியுள்ளவர்கள், வாக்களிக்கும் அதிகாரம் கொண்டவர்கள் இருப்பினும் சமூகம் சார்ந்த தேவையொன்றின் பொருட்டு அவற்றை தீர்த்துக் கொள்வதற்கான தலைமைகளை அழுத்தங்கள் மூலமாக அடிபணிய வைக்க கூடாது. அதேவேளை தலைமைகளும் இவ்வாறான அழுத்தங்களை துணிந்து தாண்ட வேண்டும்.

பொதுவாக சமூக ஊடகங்களினூடாக பரிமாறப்படும் கருத்துக்கள் விஸ்வரூபம் கொண்டெழுகின்றன. ஆனால் அவற்றில் உண்மைத்தன்மையும், ஆரோக்கியமும் பெரிதும் இருப்பதில்லை. பெரும்பாலும் போலியான ஊடகங்களை சிலர் இதற்காக பாவிக்கின்றனர். 

இவ்வாறான நிலையிலிருந்து எதிர்வரப்போகும் பொதுத் தேர்தலில் மாறுபட்ட அர்த்த புஷ்டியான நிலைக்கு நமது முஸ்லிம் சமூகம் முன்னோக்கி நகர வேண்டும். அதற்கான அடிப்படையாக அர்த்தமுள்ள, ஆக்கபூர்வமான, அறிவு சார் தலைமைகளை இனங்கண்டு அவர்களை பலப்படுத்த வேண்டும் என மேலும் தெரிவித்தார். 

Post a Comment

0 Comments