About Me

header ads

ஏற்கனவே இறந்த ஈரான் தளபதி மீண்டும் இன்று இறந்தார்


அமெரிக்க இராணுவம் இன்று காலை ஈரான் தலைநகர் பக்தாத்தில் உள்ள விமான நிலையம் மீது மேற்கொண்ட ஏவுகணைத் தாக்குதலில் ஈரான் நாட்டின் எலைட் குட்ஸ் படையின் தளபதி ஜெனரல் குவாசிம் சோல்மானி கொல்லப்பட்டதாக ஈராக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் ஈரான் ஆதரவுடன் செயல்பட்டு வந்த கிளர்ச்சிப்படை பாப்புலர் மொபைலைசேஷன் ஃபோர்ஸ்(பிஎம்எப்) படையின் துணைத் தளபதி அபு மஹதி அல் முஹன்திஸும் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டார்
ஈரான் ஆதரவில் செயல்பட்டுவந்த இஸ்லாமிக் ரெவலூஸனரி கார்ட் கார்ப்ஸ் படையின் தலைவராக குவாசிம் சோல்மானி  செயல்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஈரான் நாட்டின் 2 ஆவது அதிகாரம் படைத்த தளபதியாக குவாசிம் சொலைமணி  பார்க்கப்பட்டார். அதாவது மூத்த தலைவரான அயாத்துல்லா அலி காமேனுக்கு அடுத்தபடியாக சுலைமான் கருதப்பட்டார். 
மெத்தமாக இந்த தாக்குதலில் எட்டுப் பேர் உயிரிழந்துள்ளனர்.
ஈரான் தளபதி குவாசிம் சோல்மானி கொல்லப்பட்டதை அவர் அணிந்திருந்த மோதிரத்தை வைத்து உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன் பலமுறை சோல்மானி கொல்லப்பட்டதாகத் தகவல் வெளியாகின. 
கடந்த 2006 ஆம் ஆண்டு விமான விபத்தில் சுலைமான் இறந்ததாகவும், 2012 ஆம் ஆண்டில் டாமஸ்கஸில் வெடிகுண்டு தாக்குதலில் இறந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments