About Me

header ads

சஜித் பிரதமராவதை யாரும் தடுக்க முடியாது !!!


பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பிரதமராவதை யாராலும் தடுக்க முடியாது எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் விஜித் விஜயமுனி சொய்சா, சஜித்துக்காகவும் ஐக்கிய தேசிய கட்சிக்காகவும் வீதியில் இறங்கி போராடுவதற்கும் தயாராகவுள்ளதாகவும் கூறினார்.
கட்டான பிரதேசத்தில் இன்று நடைபெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அனுமதிப்பத்திரம் புதுப்பிக்கப்படவில்லை என்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டதன் பின்னர் பொதுஜன பெரமுனவிலிருக்கும் பலரும் துப்பாக்கிகளை கையளிப்பதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. காரணம் அவர்களும் அனுமதி பத்திரத்தை புதுப்பிக்கவில்லை. அவ்வாறெனில் அவர்களும் கைது செய்யப்பட வேண்டும். 
இவ்வாறு கடந்த அரசாங்கத்திலிருந்தவர்களை கைது செய்வதற்காக மக்கள் ஆணையை வழங்கவில்லை. மோசடிக்காரர்களுக்கு தண்டனை வழங்குவதற்காகவே மக்கள் கோதாபய ராஜபக்ஷவுக்கு வாக்களித்தனர். 
எவ்வாறிருப்பினும் எதிர்க்கட்சியில் செயற்படுவதற்கு நாம் அஞ்சப் போவதில்லை என்றும் கூறினார்.

Post a Comment

0 Comments