About Me

header ads

திண்டாடும் முஸ்லிம் காங்கிரசும், மக்கள் காங்கிரசும்


கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி படு தோல்வியடைந்ததை தொடர்ந்து அதன் பங்காளிக் கட்சிகள் மீது ஆதரவாளர்களின் விமர்சனங்கள் திரும்பத் தொடங்கியுள்ளன. அந்த வகையில் மக்கள் காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் என்பன வடக்கு , கிழக்கு மாகாணங்களில் பெரிதும் சவால்களை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. 

எதிர்வரப்போகும் தேர்தலொன்றில், முஸ்லிம் பிரதேசங்களில் கணிசமான வாக்குகள் பிரமுகர்களுக்காக உள்ளது, அதேவேளை கட்சிகளில் மு.கா விற்கு பலமான இடமும் ம.கா விற்கு வளர்ந்து வரும் இடமும் உள்ளது. அதேவேளை  மிதக்கும் வாக்களர்களின் பலமும் மிகவும் கவனிக்கத்தக்கது. இந்நிலையில் பிரதேச ரீதியிலான எதிர்பார்ப்புகள் இம்முறை மக்களை ஆட்டுவிக்கும் இன்னொரு காரணியாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. 

ஜனாதிபதியால் அறிவிக்கப்படும் வேலைவாய்ப்புக்கள், அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் அமுல் நடத்தப்படும் பட்சத்தில் கிழக்கில் முஸ்லிம் வாக்காளர்களின் எதிர்பார்ப்பில் தீர்வுகள் எட்டப்படலாம். அவ்வாறெனின் முஸ்லிம் தலைமைகளை கொண்ட கட்சிகளின் பின்னடைவுகள் மிக உறுதியாகவே தெரியும். 

இந்நிலையில் பலமான தளங்களைக் கொண்ட ஆதரவுத்தளங்களில் இக்கட்சிகள் பலமான வேட்பாளர்களை நிறுத்தியே ஆகவேண்டிய கட்டாயமும் உள்ளது. பலமான திட்டங்களுடனும் ஆளுமைகளுடனும் சங்கமிக்கும் சந்தர்ப்பத்தில் மாத்திரமே இதில் இருந்தும் மீளலாம். 

Post a Comment

0 Comments