About Me

header ads

சவூதியின் வரலாற்றை மாற்றிய புனித மக்கா முற்றுகை ; நடந்தது என்ன ???

-CC: BBC-
ஒரு மத போதகரும் அவருடைய சீடர்களும் மெக்காவில் மசூதியை ஆயுதங்களுடன் முற்றுகையிட்டு, இஸ்லாமியர்களின் புனித இடத்தை கொலைக்களமாக மாற்றி நாற்பது ஆண்டுகள் முடிந்துவிட்டன. அந்த முற்றுகை, முஸ்லிம் உலகை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி, சௌதி அரேபிய வரலாற்றின் போக்கையே மாற்றிவிட்டது என்று பிபிசியின் எலி மெல்க்கி கூறுகிறார்.
1979 நவம்பர் 20ஆம் தேதி அதிகாலையில், உலகெங்கிலும் இருந்து சுமார் 50,000 இஸ்லாமியர்கள் தாங்கள் புனிதமாகக் கருதும் மெக்காவில் கப்பா வளாகத்தை சுற்றிய பகுதியில் காலை நேர வழிபாட்டுக்காக குவிந்திருந்தனர். 40 வயதான ஜுஹய்மன் அல்-உட்டாய்பி என்ற மத குருவின் தலைமையில் 200 ஆண்கள் அந்தக் கூட்டத்தில் கலந்திருந்தனர்.
முதன்மை வழிபாட்டை இமாம் நிறைவு செய்தபோது, ஜுஹய்மனும் அவருடைய குழுவினரும் இமாமை தள்ளிவிட்டு மைக்ரோபோனை பறித்துக் கொண்டனர்.
அண்மையில் உயிரிழந்தவர்களுக்கு ஆசி பெறும் பாரம்பரிய வழக்கத்தின்படி, மூடப்பட்டிருந்த சவப்பெட்டி ஒன்றை அவர்கள் மைதானத்தின் மத்தியில் வைத்தனர். ஆனால் அந்தப் பெட்டியைத் திறந்தபோது, அதில் கைத் துப்பாக்கிகள், இயந்திரத் துப்பாக்கிகள் இருந்தன. வேக வேகமாக அந்தக் குழுவினருக்கு அவை கொடுக்கப்பட்டன.
படத்தின் காப்புரிமைGETTY IMAGES
Image caஏற்கனவே தயாரித்து கொண்டு வரப்பட்டிருந்த உரையை ஒருவர் படிக்கத் தொடங்கினார்: ``சக இஸ்லாமியர்களே. மஹ்தியின் வருகையை இன்று நாங்கள் அறிவிக்கிறோம். பூமியில் அநீதியும் அடக்குமுறையும் நிரம்பியுள்ள நிலையில், இவர் நீதி, நியாயத்தை நிலைநாட்டுவார்,'' என்று அவர் படித்தார்.
மைதானத்தில் குழுமியிருந்த யாத்ரிகர்களுக்கு இது அசாதாரணமான அறிவிப்பாகத் தோன்றியது. முகமது நபி கூறியதாக அல்லது அங்கீகரித்ததாகக் கருதப்படும் ஹதீஸ்களில், மஹதி அல்லது இறை ஆற்றலால் வழிநடத்தப்படும் ஒருவரின் வருகை பற்றி கூறப்பட்டுள்ளது. இறை ஆற்றலின் அசாதாரணமான சக்திகளைக் கொண்டவராக அவர் இருப்பார் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. நீதி மற்றும் உண்மையான நம்பிக்கை உள்ள காலத்தில் அப்படியானவர் தோன்றுவார் என்று இஸ்லாமியர்கள் நம்புகின்றனர்.
ஜுஹய்மனை பின்பற்றும் போதகரான காலித் அல்-யாமி என்பவர், ``மஹ்தி வருகையை எண்ணற்ற காட்சிகள் உறுதிப்படுத்தியுள்ளன '' என்று கூறினார். நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் அவரை தங்கள் கனவில் பார்த்திருக்கிறார்கள் என்றார். அவர்கள் மத்தியில் அந்த மஹ்தி இப்போது இருக்கிறார் என்றும், அவருடைய பெயர் முகமது பின் அப்துல்லா அல்-குவாஹ்டானி என்றும் கூறினார்.
அந்த உரையின் ஆடியோ பதிவைக் கேட்டபோது, பேசிக் கொண்டிருந்தவரை ஜுஹய்மன் அவ்வப்போது இடைமறித்து, தன் ஆதரவாளர்களை நுழைவாயிலுக்கு அருகில் செல்லுமாறும், உயரமான மினாரெட்களில் கண்காணிப்பு இடங்களுக்குச் செல்லுமாறும் கூறியதைக் கேட்க முடிந்தது. அப்போது மெக்கா நகரில் அவை முக்கியமான இடங்களாக இருந்தன.
``கவனியுங்கள் சகோதரர்களே! அஹமத் அல்-லெஹெபி மேலே உச்சிக்கு செல்லுங்கள். நுழைவாயில்களில் யாராவது உம்மை எதிர்த்தால் சுட்டுத் தள்ளுங்கள்!''
தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பாத ஒருவரின் கூற்றின்படி, மஹ்திக்கு ஜுஹய்மன் தான் முதலில் மரியாதை செலுத்தினார் என்றும், பிறகு மற்றவர்கள் அதேபோல செய்தார்கள் என்றும் தெரிகிறது. ``இறைவன் மிகப் பெரியவன்'' என்ற கோஷங்கள் ஒலித்தன.
ஆனால் அங்கு குழப்பமும் நிலவியது. ``மசூதியில் நிறைய வெளிநாட்டினர் இருந்தனர். அவர்களுக்கு சிறிதளவு தான் அரபி மொழி பேசத் தெரியும். அங்கே என்ன நடக்கிறது என்று அவர்களுக்குப் புரியவில்லை'' என்று ஜுஹய்மனின் ஆதரவாளர்கள் சிலரை அறிந்துள்ள, எகிப்திய மத கல்வி மாணவரான அப்டெல் மோனெய்ம் சுல்தான் கூறினார்.
1979ல் மாணவராக இருந்த அப்டெல் மோனெய்ம் சுல்தான் அந்த நிகழ்வுகளின் நேரடியான ஒரு சாட்சியாக உள்ளார்.
Image caption1979ல் மாணவராக இருந்த அப்டெல் மோனெய்ம் சுல்தான் அந்த நிகழ்வுகளின் நேரடியான ஒரு சாட்சியாக உள்ளார்.
எந்த வகையிலான வன்முறைக்கும் குரானில் தடை விதிக்கப்பட்ட இடத்தில், ஆயுதங்களுடன் ஆண்களைப் பார்த்தது மற்றும், சில முறை துப்பாக்கிகளால் சுடப்பட்டது ஆகியவை, வழிபாட்டுக்கு வந்த பலரையும் அதிர்ச்சியுறச் செய்தது. இன்னும் திறந்திருக்கும் நுழைவாயில்களை நோக்கி அவர்கள் நெருக்கியடித்துக் கொண்டு ஓடினர்.
``துப்பாக்கி ஏந்தியவர்களைப் பார்த்ததும் மக்கள் ஆச்சர்யம் அடைந்தார்கள். இப்படி பார்த்து அவர்களுக்குப் பழக்கம் இல்லை. இது அவர்களுக்கு பயத்தை ஏற்படுத்தியதில் எந்த சந்தேகமும் இல்லை. அது மிகவும் மூர்க்கத்தனமானது'' என்று அப்டெல் மோனெய்ம் சுல்தான் கூறினார்.
ஆனால், ஒரு மணி நேரத்தில் அச்சமில்லாமல் அவர்கள் முழுமையாக மசூதியை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டனர். சௌதி ராஜ குடும்பத்தினரின் அதிகாரத்துக்கு நேரடி சவால் விடுக்கும் வகையில் அவர்களின் செயல்பாடு இருந்தது.
அவர்கள் ஆக்கிரமித்துக் கொண்ட மசூதி அல்-ஜமா அல்-சலாபியா அல்-முஹ்டாசிபா (ஜே.எஸ்.எம்.) என்ற சங்கத்திற்குச் சொந்தமானது. சௌதி அரேபியாவில் சமூக மற்றும் மத மாண்புகள் குறைந்துவிட்டதாக அந்தச் சங்கம் கூறியது.
எண்ணெய் வளம் மூலம் அபரிமிதமாக வருமானம் கிடைத்த நிலையில், அந்த நாடு நுகர்வோர் சமுதாயம் கொண்டதாக மெல்ல மெல்ல மாறிக் கொண்டிருந்தது. கார்களும், மின்சாதனங்களும் சாதாரணமான உபயோகத்துக்கு வந்துவிட்டன. நாடு நகரமயமாகிக் கொண்டிருந்தது. சில பகுதிகளில், பொது இடங்களில் ஆண்களும், பெண்களும் கலந்து பங்கேற்றனர்.
ஆனால் ஜே.எஸ்.எம். உறுப்பினர்கள் எளிமையான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தனர். தீவிர மத அடிப்படைவாதம், குரான் மற்றும் ஹதீஸ்களைப் படிப்பது, சௌதி மத அமைப்பு வரையறுத்தபடி இஸ்லாமிய விதிமுறைகளைப் பின்பற்றுவது என அவர்களுடைய வாழ்க்கை முறை இருந்தது.
ஜே.எஸ்.எம். நிறுவனர்களில் ஒருவரான ஜுஹய்மன், நாட்டின் மத்தியில் உள்ள பெடவுயின் பகுதியில் சாஜிர் என்ற இடத்தைச் சேர்ந்தவர். தனது கடந்த காலம் பூரணத்துவமானது கிடையாது என்று தன் ஆதரவாளர்களிடம் அவரே ஒப்புக்கொண்டிருக்கிறார். பாலைவனத்தில் தீ மூட்டிய இடத்தின் அருகில் மாலை நேரத்தில் பேசும்போது அல்லது தன் ஆதரவாளர்களில் ஒருவருடைய வீட்டில் கூடியிருந்தவர்களிடம் பேசும்போது, தனது வீழ்ச்சி மற்றும் எழுச்சி பற்றி கூறியிருக்கிறார்.
படத்தின் காப்புரிமைALAMY
Image captionஇந்த முற்றுகையால் உலகெங்கும் முஸ்லிம்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
``சட்டவிரோத வியாபாரத்தில், போதை மருந்து கடத்தல் உள்ளிட்ட வியாபாரத்தில்'' தாம் ஈடுபட்டிருந்ததாக ஜுஹய்மன் கூறியதாக, அந்தக் குழுவினரின் கூட்டங்களில் அடிக்கடி கலந்து கொண்டுள்ள மதக் கல்வி மாணவர் உசமா அல்-க்யூசி தெரிவித்தார்.
இருந்தபோதிலும், அவர் மனம் திருந்தி, மத ஈடுபாட்டில் ஆறுதலைக் கண்டார். மற்றவர்கள் பொறாமைப்படும் வகையிலான, அர்ப்பணிப்புள்ள தலைவராக மாறினார். ஜே.எஸ்.எம்.மின் பல உறுப்பினர்கள், குறிப்பாக இளைஞர்கள் அவருடைய வார்த்தைகளுக்காகக் காத்திருந்தனர்.
அவரை அறிந்துள்ள மதக் கல்வி மாணவர் முத்வலி சலேஹ் போன்ற பலரும், அவருடைய ஆளுமை மற்றும் அர்ப்பணிப்பான செயல்பாடுகளுக்கு அத்தாட்சி தருகின்றனர். ``யாரும் இவரைப் பார்த்தது இல்லை. அவரை பிடிக்கவும் செய்யாது. ஆனால் அவர் விநோதமானவர். அவரிடம் ஒரு ஈர்ப்பு இருந்தது. தான் எடுத்துக் கொண்ட லட்சியத்துக்கு உண்மையாக இருந்தார். இரவும் பகலும் என தன் வாழ்க்கை முழுவதையும் அல்லாவுக்குக் கொடுத்துவிட்டார்'' என்று அவர்கள் கூறுகின்றனர்.
ஆனால், அவர் தவறாகக் கற்பிக்கப்பட்டவர் என்று மதபோதனை தலைவர் ஒருவர் கூறுகிறார்.
`` பெடவுயின் கள் வாழும் ஊரகப் பகுதிகள் மற்றும் தனியாக உள்ள பகுதிகளுக்குச் செல்வதில் ஜுஹய்மன் ஆர்வமாக இருந்தார்'' என்று அவரை நெருக்கமாக பின்தொடர்ந்த நாசர் அல்-ஹோஜெய்மி தெரிவித்தார். ``ஏனெனில் அவருக்கு தூய்மையான அரபி மொழிப் புலமை [இஸ்லாமிய அறிஞர்கள் இதில் புலமை மிக்கவர்கள்] இல்லாத காரணத்தால், பெடவுயின் நடையில் அதிகமாகப் பேசுவார். தன்னுடைய புலமையின்மை வெளிப்பட்டுவிடும் என்பதால், கற்றவர்கள் மத்தியில் உரையாற்றுவதை அவர் தவிர்த்தார்'' என்று நாசர் தெரிவித்தார்.
இருந்தபோதிலும், ஜுஹய்மன் தேசிய பாதுகாப்புப் படை வீரராகப் பணியாற்றியுள்ளார். ஒரு பகுதியை கைப்பற்றுவதற்கான பணிகளை மேற்கொள்வதில், அவருடைய ராணுவ அனுபவம் முக்கியமாகக் கை கொடுத்தது.
சௌதி மதகுருமார்கள் சிலருடன் ஜே.எஸ்.எம். மோதல் போக்கை கடைபிடித்ததால், அதிகாரவர்க்கத்தின் கெடுபிடிகள் அதிகமாயின.
ஜுஹய்மன் பாலைவனப் பகுதிக்கு தப்பியோடினார். சௌதி ராஜ குடும்பத்தினரின் செயல்பாடுகள் தரம் தாழ்ந்துவிட்டதாக விமர்சனம் செய்து நிறைய துண்டுப்பிரசுரங்களை அவர் அங்கு தான் தயாரித்தார். லௌகீக (உலக வாழ்க்கையின்) ஆதாயங்களுக்காக ராஜ குடும்பத்தினரின் செயல்பாடுகளுக்கு மதகுருமார்கள் ஆதரவு தெரிவிக்கிறார்கள் என்றும் அவர் குற்றஞ்சாட்டினார். சௌதி அரேபியா செயல்பாடுகளால் தரம் தாழ்ந்துவிட்டது என்றும், இறையாற்றலால் தான் அதை மீட்க முடியும் என்றும் அவர் நம்பினார்.
இந்தச் சூழ்நிலையில் தான் முகமது பின் அப்துல்லா அல்-குவாஹ்டானியை மஹ்தியாக அவர் அடையாளப்படுத்தினார். அல்-குவஹ்டானி நல்ல தன்மை உள்ளவராக, அர்ப்பணிப்பு உள்ளவராக, கவிஞராக அறியப்பட்ட இளம் போதகராக இருந்தார்.
மஹ்தியாக வருபவரின் பெயரின் முதல் பகுதியும், தந்தையின் பெயரும் முகமது நபியின் பெயரை ஒத்ததாக இருக்கும் என்றும், அகலமான நெற்றி, மெலிதான, கழுகுபோல வளைந்து மூக்கு உள்ளவராக இருப்பார் என்று ஹதிஸ்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவை அனைத்துமே அல்-குவாஹ்டானிக்குப் பொருந்தி வருவதாக ஜுஹய்மன் கருதினார். ஆனால் அல்-குவாஹ்டானி இந்த யோசனையால் அதிர்ச்சியடைந்தார். அவர் மனதை ஜுஹய்மன் மாற்றியதால், அவர் வழிபாட்டுக்கு சென்றுவிட்டார்.
இருந்தபோதிலும், கடைசியாக ஜுஹய்மன் சொல்வது சரிதான் என கருதி அவர் வெளியில் வந்தார். மஹ்தி என்ற பங்களிப்பை அவர் ஏற்றுக் கொண்டார். குவாஹ்டானியின் மூத்த சகோதரி, ஜுஹய்மனின் இரண்டாவது மனைவியானதை அடுத்து, அவர்களுக்கு இடையிலான பிணைப்பு மேலும் வலுப்பெற்றது.
மெக்கா 1979: சௌதி வரலாற்றை மாற்றிய மசூதி முற்றுகைபடத்தின் காப்புரிமைALAMY
இந்த முற்றுகைக்கு சில மாதங்களுக்கு முன்னதாகவே, அல்-குவாஹ்டானி மசூதியில் உயரமான உருவத்தில் நின்றிருப்பது போலவும், இஸ்லாம் பற்றிய பெரிய பேனர் வைத்திருப்பது போலவும் தாங்கள் கனவு கண்டதாக மெக்காவில் நூற்றுக்கணக்கானோரும், யாத்ரிகர்களும் கூறியதாக விநோதமான வதந்தி பரவியது.
ஜுஹய்மனை பின்பற்றுபவர்கள் சம்மதிக்க வைக்கப்பட்டனர். ஜே.எஸ்.எம். உறுப்பினர் முத்தவல்லி சலேஹ் இதுபற்றி நினைவுகூர்கிறார். ``கடைசி கூட்டம் ஒன்றில் ஒரு சகோதரர் என்னிடம் கேட்டது நினைவிருக்கிறது. சகோதரர் முத்தவல்லி, நீங்கள் மெஹ்தி பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டார். தயவுசெய்து மன்னியுங்கள், அதுபற்றிப் பேச வேண்டாம் என்று நான் கூறினேன். நீ அமைதியாக இருக்கும் ஒரு பிசாசு. சகோதரரே, மெஹ்தி என்பது நிஜம், அது முகமது பின் அப்துல்லா அல்-குவாஹ்டானி தான் என்று ஒருவர் அவருக்கு பதில் அளித்தார்'' என்று அவர் குறிப்பிட்டார்.
ஜுஹய்மனும், அவருடைய குழுவினரும் தஞ்சம் புகுந்த தொலைதூரப் பகுதியில், வன்முறை போராட்டத்துக்கு ஆயத்தமாகத் தொடங்கினர்.
மசூதி முற்றுகையிடப்பட்ட நிகழ்வுக்கு சௌதி தலைமையின் நடவடிக்கை மெத்தனமாக இருந்தது.
பட்டத்து இளவரசர் பாஹித் பின் அப்துல் அஜீஸ் அல்-சௌத் அப்போது அரபு லீக் உச்சி மாநாட்டுக்காக டுனீசியா சென்றிருந்தார். ராஜ குடும்பத்தினரின் பாதுகாப்பு பொறுப்பை ஏற்றிருக்கும், தேசியப் பாதுகாப்புப் படையின் தலைவரும், இளவரசருமான அப்துல்லா - மொராக்கோவில் இருந்தார். இந்த முற்றுகைப் போரை கையாள வேண்டிய பொறுப்பு, உடல் நலம் குன்றியிருந்த மன்னர் காலித் மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சரான இளவரசர் சுல்தான் ஆகியோரிடம் வந்தது.
பிரச்சனையின் தீவிரத்தை சௌதி காவல் துறையினர் முதலில் புரிந்துகொள்ளத் தவறிவிட்டனர். இதுபற்றி புலனாய்வு செய்ய சில ரோந்து வாகனங்களை மட்டும் அவர்கள் அனுப்பினர். ஆனால் அவர்கள் மசூதியை நெருங்கியபோது, துப்பாக்கிக் குண்டுகள் மழை போல பொழிந்தன.
பிரச்சனையின் தீவிரம் புரிந்த பிறகு, புனித இடத்தை மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கு தேசிய பாதுகாப்பு படை அவசர அவசரமாக நடவடிக்கைகளில் ஈடுபட்டது.
மார்க் ஹம்ப்ளே: தரைக்கு அடியில் உள்ள கல்லறைகள் பகுதிக்கு கலகக்காரர்கள் செல்லும் வகையில் சௌதி படையினர் முன்னேறினர்.
Image captionமார்க் ஹம்ப்ளே: தரைக்கு அடியில் உள்ள கல்லறைகள் பகுதிக்கு கலகக்காரர்கள் செல்லும் வகையில் சௌதி படையினர் முன்னேறினர்.
அந்தத் தாக்குதல் துணிச்சலானது ஆனால் சிறுபிள்ளைத்தனமானது என்று, அந்த சூழ்நிலை பற்றி நன்கு அறிந்துள்ள ஒரு சில மேற்கத்தியர்களில் ஒருவான, ஜெட்டாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் அரசியல் பிரிவு அதிகாரியான மார்க் ஹம்ப்ளே கூறினார். ``அவர்கள் உடனடியாக சுட்டு வீழ்த்தப்பட்டார்கள். துல்லியமாகக் குறிவைத்து சுடும் வீரர்களிடம் அதிநவீன ஆயுதங்கள், மிகச் சிறந்த தரத்திலான பெல்ஜியம் துப்பாக்கிகள் இருந்தன'' என்று அவர் தெரிவித்தார்.
போராட்டக்காரர்கள் தெளிவாகத் திட்டமிட்டு செயல்பட்டிருந்தால், எளிதில் அவர்களை வென்றிருக்க முடியாது என்பது தெளிவாகத் தெரிந்தது. மசூதியைச் சுற்றி பாதுகாப்பு வளையம் உருவாக்கப்பட்டு, சிறப்பு அதிரடிப் படையினர், துணை ராணுவ வீரர்கள் வரவழைக்கப் பட்டனர். ஆயுதங்கள் தாங்கிய பாதுகாப்பு கவச வாகனங்கள் கொண்டு வரப்பட்டன.
இரண்டாவது நாள் மதியத்துக்குப் பிறகு சண்டை தீவிரமடைந்தது என்று, உள்ளே சிக்கியிருந்த மாணவர் அப்டெல் மோனெய்ம் சுல்தான் தெரிவித்தார். ``மினாரெட்களை நோக்கி தாக்குதல்கள் நடந்ததை நான் பார்த்தேன். வானில் தொடர்ந்து ஹெலிகாப்டர்கள் வட்டமடித்துக் கொண்டிருந்தன. ராணுவ விமானங்களும் பறந்து கொண்டிருந்தன'' என்று அவர் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.
அந்த மசூதியானது கப்பா மைதானத்தை சுற்றி மாடங்கள், நடைபாதை தாழ்வாரங்கள் கொண்ட பிரமாண்டமான கட்டடமாக இருந்தது. பல நூறு மீட்டர் நீளத்துக்கு தாழ்வாரப் பாதை இருந்தது. இரண்டு மாடிகளாக அது கட்டப்பட்டிருந்தது. அடுத்த இரு தினங்களில், உள்ளே நுழையும் முயற்சியாக சௌதி படைகள் முன்களத் தாக்குதலில் ஈடுபட்டன. அவர்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தபோதும், அதிக ஆயுதங்கள் வைத்திருந்தபோதும், கலகக்காரர்களை வெல்ல முடியாமல் போனது. அவர்களுடைய முயற்சிகளை கலகக்காரர்கள் அடுத்தடுத்து முறியடித்துக் கொண்டிருந்தனர்.
அன்றைய தினம் கப்பா அருகே அவர்கள் சந்தித்தபோது, ஜுஹய்மன் மிகுந்த நம்பிக்கையுடனும், பதற்றமின்றியும் இருந்தார் என்று அப்டெல் மோனெய்ம் சுல்தான் நினைவுகூர்ந்தார். ``என் கால் மீது தன் தலையை வைத்து அரை மணி நேரம் அல்லது 45 நிமிடங்கள் அவர் தூங்கினார். அப்போது அவருடைய மனைவியும் அருகில் நின்றிருந்தார். அவருடைய மனைவி ஒருபோதும் அவரைவிட்டு விலகவே இல்லை'' என்று அவர் கூறினார்.
அடர்ந்த புகையை உருவாக்குவதற்காக கார்ப்பெட்கள் மற்றும் டயர்களுக்கு கலகக்காரர்கள் தீ வைத்தனர். சௌதி படையினர் மீது தாக்குதல் நடத்த, புகையின் இடையே நுழைந்து அவர்கள் முன்னேறிச் சென்றனர். அந்தக் கட்டடமே கொலைக் களமாகிவிட்டது. கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை சீக்கிரத்திலேயே பல நூறைத் தாண்டியது.
``குறுகிய இடத்துக்குள் நடந்த அந்தச் சண்டை ஒருவருக்கு ஒருவர் எதிர்கொள்வதைப் போல இருந்தது'' என்று உள்நாட்டுப் பாதுகாப்பு சிறப்புப் படைகள் அமைச்சகத்தின் கமாண்டர் மஜ் முகமது அல்-நுபாய் தெரிவித்தார். இடப்புறமும், வலப்புறமும் குண்டுகள் பறந்து கொண்டிருக்க, வீரர்கள் முன்னேறிச் செல்வது - நம்ப முடியாத வகையில் இருந்தது'' என்றார் அவர்.
மன்னர் காலித் கூட்டிய அரசவையின் மதகுருமார்கள் கூட்டத்தில் ஃபத்வா உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. எனவே, கலகக்காரர்களை வெளியேற்ற என்ன மாதிரியான நடவடிக்கையும் எடுக்க அனுமதி கிடைத்தது. மினாரெட்களில் இருந்து கலகக்காரர்களை விரட்டுவதற்கு டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளும், கனரக துப்பாக்கிகளும் பயன்படுத்தப்பட்டன. நுழைவாயில்களை உடைத்து முன்னேற ஆயுதங்கள் நிரப்பிய வாகனங்கள் அனுப்பப்பட்டன.
கலகக்காரர்களை மஹ்தி ஒன்று திரட்டினார். ``அவருடைய கண்களுக்கு கீழே இரண்டு சிறிய காயங்கள் இருந்ததையும், அவருடைய ஆடையில் துப்பாக்கிக் குண்டுகள் துளைத்ததால் ஓட்டைகள் ஏற்பட்டிருந்ததையும் நான் பார்த்தேன்'' என்று மோனெய்ம் சுல்தான் தெரிவித்தார். ``தாம் அழிவில்லாதவர் - தாம் தான் மஹ்தி என்ற நினைப்பில் எந்த இடத்திலும் தன்னால் வெளியே வர முடியும் என்று நம்பிக் கொண்டிருந்தார்'' என்றும் அவர் குறிப்பிட்டார்.
தனக்கு எந்த பாதிப்பும் வராது என்ற குவஹ்டானியின் நம்பிக்கை பொய்த்துப் போனது. துப்பாக்கிக் குண்டுகளுக்கு அவர் இரையானார்.
``அவர் மீது குண்டு பட்டபோது, மஹ்தி காயமடைந்துவிட்டார், மஹ்தி காயமடைந்துவிட்டார் என மக்கள் கூச்சல் போட்டனர். அவரைக் காப்பாற்றுவதற்காக சிலர் அவரை நோக்கி ஓட முயற்சி செய்தனர். ஆனால் தொடர்ந்து துப்பாக்கிக் குண்டுகள் பொழிந்து கொண்டிருந்ததால் யாரும் அங்கு செல்ல முடியவில்லை, எல்லோரும் பதுங்க வேண்டியதாயிற்று'' என்று பெயர் தெரிவிக்க விரும்பாத நேரடி சாட்சி ஒருவர் கூறினார்.
மஹ்திக்கு காயம் ஏற்பட்டுவிட்டது என்று ஜுஹய்மனிடம் அவர்கள் கூறினர். ஆனால் ``அவர்களை நம்பாதீர்கள். அவர்கள் துரோகிகள்'' என்று ஜுஹய்மன் தன் ஆதரவாளர்களிடம் கூறினார்.
ஆறாவது நாளில்தான் மைதானம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கட்டடத்தை சௌதி படையினரால் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர முடிந்தது. ஆனால் மஹ்தி இன்னும் உயிருடன் இருக்கிறார், கட்டடத்துக்குள் எங்கேயோ இருக்கிறார் என்று ஜுஹய்மன் கூறியதை நம்பி, நூற்றுக்கணக்கான கலகக்காரர்கள் அறைகளுக்கு இடையிலான இடைவெளிகளிலும், தரைக்கடியில் உள்ள அறைகளிலும் பதுங்கியிருந்தனர்.
இப்போது அவர்களின் நிலைமை சிக்கலானதாக இருந்தது. ``இறந்தவர்களின் உடல்கள் மற்றும் காயங்களால் ஏற்பட்ட அழுகிய நாற்றம் வீசத் தொடங்கியது'' என்று பெயர் தெரிவிக்க விரும்பாத ஒரு நேரடி சாட்சி தெரிவித்தார். ``ஆரம்பத்தில் தண்ணீர் கிடைத்துக் கொண்டிருந்தது. ஆனால் போகப் போக, உணவுப் பொருட்களை அவர்கள் பகிர்ந்து கொடுத்தனர். பேரிச்சைகள் காலியாகிவிட்டன. எனவே அவர்கள் பச்சை மாவு உருண்டை தயாரித்து சாப்பிட்டனர். அது கொடூரமான சூழ்நிலை. பயங்கரம் நிறைந்த திரைப்படத்தைப் பார்ப்பது போல இருந்தது'' என்றார் அவர்.
தங்களுக்கு வெற்றி கிடைத்துவிட்டதாக சௌதி அரசு அடுத்தடுத்து அறிவிப்புகள் செய்து கொண்டிருந்தாலும், மசூதியில் வழிபாடு நடக்காத காரணத்தால் இஸ்லாமிய உலகில் வேறு எண்ணங்கள் ஏற்பட்டன. ``சௌதி அரசு அடுத்தடுத்து வெவ்வேறு உத்திகளைப் பயன்படுத்தியது. ஆனால் அவை வெற்றி பெறவில்லை'' என்று ஹம்ப்ளே கூறினார். ``அவற்றின் மூலம் கலகக்காரர்கள் தரைக்கடியில் உள்ள அறைகளுக்கு பின்வாங்கத் தொடங்கினர்'' என்றார் அவர்.
தலைமை ஏற்றிருப்பவர்களை உயிருடன் பிடித்து, முற்றுகையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு சௌதி அரசுக்கு உதவி தேவை என்பது தெளிவாகிவிட்டது. பிரெஞ்சு அதிபர் வலேரி கிஸ்கார்ட் டி எஸ்டெயிங் உதவியை சௌதி அரசு நாடியது.
``சௌதி படையினருக்கு நல்ல தலைமை இல்லை என்பதால், எப்படி செயல்படுவது என அவர்களுக்குத் தெரியவில்லை என்று என்னிடம் எங்கள் தூதர் கூறினார்'' என்று பிபிசியிடம் கிஸ்கார்ட் டி எஸ்டெயிங் கூறினார். அந்தச் சிக்கலில் பிரான்ஸ் தலையீடு இருந்தது என்பதை அப்போது முதன்முறையாக அவர் உறுதிப்படுத்தினார்.
வலேரி கிஸ்கார்ட் டி எஸ்டெயிங்
Image captionவலேரி கிஸ்கார்ட் டி எஸ்டெயிங்
``அது அபாயகரமானது என்பது போல எனக்குத் தோன்றியது. ஏனெனில், அமைப்பு முறை பலவீனமாக இருந்தது. உலக எண்ணெய் சந்தையில் ஏற்படும் பாதிப்பு ஏற்படும் அபாயம் இருந்தது.''
பயங்கரவாத எதிர்ப்புக்காக அப்போது தான் அமைக்கப்பட்டிருந்த ஜி.ஐ.ஜி.என். பிரிவின் மூன்று ஆலோசகர்களை பிரெஞ்சு அதிபர் ரகசியமாக அனுப்பி வைத்தார். இஸ்லாத்தின் பிறப்பிடத்தில் மேற்கத்திய தலையீடு பற்றி விமர்சனம் எழாமல் தவிர்ப்பதற்காக, இந்த நடவடிக்கையை ரகசியமாக மேற்கொள்ள வேண்டியிருந்தது.
அருகில் உள்ள டாய்ப் நகரில் ஒரு ஹோட்டலில் பிரெஞ்சு குழுவினர் தங்கினர். கலகக்காரர்களை வெளியேற்றுவதற்கு அங்குதான் அவர்கள் திட்டம் தீட்டினர். கீழ்த்தளங்களில் வேறொரு வாயுவை நிரப்பினால், அங்கு இருக்கும் காற்று சுவாசிக்க ஏற்றதாக இல்லாமல் போய்விடும் என திட்டம் தீட்டப்பட்டது.
பிரெஞ்ச் கமாண்டோக்கள், இடது புறம் பால் பார்ரில்.
Image captionபிரெஞ்ச் கமாண்டோக்கள், இடது புறம் பால் பார்ரில்.
``ஹோட்டல்களில் 50 மீட்டர் இடைவெளியில் பள்ளங்கள் தோண்டப்பட்டன. கீழ்த்தளத்தை அடையும் வகையில் அவை தோண்டப்பட்டன'' என்று, அந்த நடவடிக்கையை செயல்படுத்தும் பொறுப்பை ஏற்றிருந்த கேப்டன் பால் பார்ரில் கூறினார். ``இந்த ஓட்டைகள் வழியாக வாயு செலுத்தப்பட்டது. கலகக்காரர்கள் மறைந்திருந்த ஒவ்வொரு மூலையிலும் கையெறி குண்டுகளை வெடிக்கச் செய்து இந்த வாயு பரவும்படி செய்யப்பட்டது'' என்று அவர் கூறினார்.
கடைசியாக எதிர்ப்பு காட்டிக் கொண்டிருந்த கலகக்காரர்களுடன், பாதாள அறையில் பதுங்கியிருந்த ஒருவர், உலகம் முடிவுக்கு வந்துவிட்டதைப் போல அப்போது இருந்தது என்று தெரிவித்தார்.
``எங்களுக்கு மரணம் நெருங்கிவிட்டதாக உணர்ந்தோம். ஏனெனில் அது தோண்டுகிற சப்தமா அல்லது துப்பாக்கி சப்தமா என்று எங்களுக்குத் தெரியவில்லை. அது பயமூட்டும் சூழ்நிலையாக இருந்தது'' என்றார் அவர்.
பிரெஞ்சுப் படையினரின் திட்டம் வெற்றிகரமாக இருந்தது.
``கடைசி இரண்டு நாட்களில் ஜுஹய்மனிடம் ஆயுதங்கள் மற்றும் உணவு இல்லாமல் போய்விட்டது'' என்று அவருடைய ஆதரவாளர்களில் ஒருவராக இருந்த நாசர் அல்-ஹோஜெய்மி தெரிவித்தார். ``அவர்கள் ஒரு சிறிய அறையில் கூடியிருந்தனர். கூரையில் போட்ட துளை வழியாக ராணுவத்தினர் புகைக் குண்டுகளை வீசினர். அதனால் தான் அவர்கள் சரணடைந்தனர். ஜுஹய்மன் சென்றார், மற்றவர்களும் அவரைப் பின்தொடர்ந்தனர்'' என்று அவர் தெரிவித்தார்.
மெக்கா 1979: சௌதி வரலாற்றை மாற்றிய மசூதி முற்றுகைபடத்தின் காப்புரிமைGETTY IMAGES
அதைத் தொடர்ந்து சௌதி இளவரசர்கள் மற்றும் அதிர்ச்சியில் இருந்த, ஆனால் அச்சப்படாத ஜுஹய்மன் இடையில் நடந்த சந்திப்புகளின் போது உடனிருந்த மஜ் நுபாய் பின்வருமாறு கூறியுள்ளார். ``ஏன் இப்படி செய்தீர்கள் ஜுஹய்மன்" என்று இளவரசர் சௌத் அல்-பைசல் கேட்டார். ``அதுதான் விதி. வேறு ஏதாவது உங்களுக்குத் தெரிய வேண்டுமா? எனக்கு கொஞ்சம் தண்ணீர் வேண்டும்'' என்று ஜுஹய்மன் கூறினார்.
ஊடகங்களின் காமிராக்கள் எதிரே ஜுஹய்மன் நிறுத்தப்பட்டார். ஒரு மாதம் கழித்து, கலகக்காரர்கள் 63 பேருக்கு சௌதி அரேபியா முழுக்க எட்டு நகரங்களில் பொது இடங்களில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. ஜுஹய்மனுக்கு தான் முதலில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
ஜுஹய்மன் அல்-உட்டய்பிபடத்தின் காப்புரிமைGETTY IMAGES
Image captionஜுஹய்மன் அல்-உட்டய்பி
மஹ்தி என்ற நம்பிக்கையில் ஜுஹய்மன் தனிமைபடுத்தப்பட்டார் என்றாலும், நவீனத்துவத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சமூக மற்றும் மத அடிப்படைவாத கருத்தாளர்களின் அங்கமாக அவர் இருந்தார். மன்னர் குடும்பத்தினருக்கு எதிராக அடிப்படைவாத மதகுருமார்கள், நவீனத்துவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்த முற்றுகை ஒருவரிடம் தாக்கத்தை ஏற்படுத்தியது என்றால், அது ஒசாமா பின் லேடன் தான். சௌதி ராஜ குடும்பத்தினருக்கு எதிரான ஒரு வெளியீட்டில், ``இந்தப் பிரச்சினைக்கு அமைதியாகத் தீர்வு கண்டிருக்க முடியும் என்றாலும், ராஜ குடும்பம் தவறு செய்துவிட்டது'' என்று அவர் கூறியுள்ளார். ``தடை செய்யப்பட்ட பகுதியின் மண்ணில் நடந்த சம்பவங்கள் எனக்கு இன்னும் நினைவில் இருக்கின்றன'' என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
``ஜுஹய்மனின் நடவடிக்கைகளால், அனைத்து நவீனத்துவங்களும் நின்று போயின'' என்று நாசர் அல்- ஹோஜெய்மி கூறுகிறார். ``சிறிய உதாரணம் தர விரும்புகிறேன். தொலைக்காட்சிகளில் பெண் தொகுப்பாளர்களை அரசு நீக்க வேண்டும் என்பது ஜுஹய்மனின் கோரிக்கைகளில் ஒன்று. அந்தச் சம்பவத்துக்குப் பிறகு தொலைக்காட்சிகளில் பெண் தொகுப்பாளர்கள் ஒருவரும் இடம் பெறவில்லை'' என்று அவர் கூறினார்.
அடுத்த நான்கு தசாப்தங்களில் பெரும்பகுதி காலத்தில் சௌதி அரேபியா இந்த அடிப்படைவாத பாதையிலேயே சென்றது. சமீப காலமாகத்தான் அதை மீறும் அறிகுறிகள் தென்படுகின்றன என்று அவர் குறிப்பிடுகிறார்.
2018 மார்ச் மாதம் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அளித்த பேட்டி ஒன்றில், 1979க்கு முன்பு, ``மற்ற வளைகுடா நாடுகளைப் போல நாங்களும் சாதாரண வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தோம். பெண்கள் கார்களை ஓட்டிச் சென்றனர். சௌதி அரேபியாவில் திரையரங்குகள் இருந்தன'' என்று கூறியுள்ளார்.
மசூதி முற்றுகை பற்றி குறிப்பிட்ட போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments