About Me

header ads

அதாவுல்லாஹ் வின் மீளெழுச்சி சாத்தியப்படுமா ???



"இந்நிலையில் சமூகத்தின் தேவைகளாக கருதப்படுகின்ற இலக்குகளை தேர்தல் கால பிரச்சாரத்திற்காக மாத்திரம் கையாளாது அடைந்து கொள்வதற்கான நிலைகளையும் சாத்தியப்பாடுகளையும் தெளிவு படுத்த வேண்டிய கடப்பாடும் உணரப்பட வேண்டும்"


அக்கரைப்பற்று தலைமைத்துவம் கிழக்கில் காலூன்றுவதற்கான தருணம் இதுவென நினைக்கத்தூண்டுகின்ற சந்தர்ப்பம் ஜனாதிபதி தேர்தலை தொடர்ந்து உருவாகி இருக்கின்றது. 

இந்நிலையில் கடந்த காலங்களைப் போன்று முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ்வும் அவரது தேசிய காங்கிரஸ் கட்சியும் மிதவாத நிலையிலும் பிரபுத்துவப் போக்குடனும் நடந்து கொள்வது அரசியல் மீலேழுச்சியற்ற நிலையினை நிரந்தரமாக அரசியலில் ஏற்படுத்தும் நிலையும் இல்லாமலில்லை. 

கூட்டுபொறுப்பு, சமயோசிதம், வெளிப்படை போன்ற அரசியல் தலைமைத்துவ பண்பு மற்றும் தெளிவான அணிச்செயன்முறை மிக இன்றியமையாத இன்றைய அக்கட்சி சார்ந்த உறுப்பினர்களின் தேவையாகும். அத்துடன் கட்சியின் கடைநிலை உறுப்பினர்வரை பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டிய அழுத்தமும் இப்போது தேவையான ஒன்றாகும். 

எதிர்வரப்போகும் பொதுத்தேர்தலில் தமது கட்சியின் பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் உள்ள நிலையில்,  நடைமுறையிலுள்ள அரசாங்கத்தின் பிரதிநிதியாக அல்லது பங்காளியாக போட்டியிடப்போகின்ற ஒரே முஸ்லிம் சமூகம் சார் கட்சி தேசிய காங்கிரஸ் மாத்திரமே. 

இந்நிலையில் சமூகத்தின் தேவைகளாக கருதப்படுகின்ற இலக்குகளை தேர்தல் கால பிரச்சாரத்திற்காக மாத்திரம் கையாளாது அடைந்து கொள்வதற்கான நிலைகளையும் சாத்தியப்பாடுகளையும் தெளிவு படுத்த வேண்டிய கடப்பாடும் உணரப்பட வேண்டும். 

முஸ்லிம் சமூகத்தின்  பல்வேறு எதிர்பார்ப்புக்களையும்
கொண்டுள்ள நிலையில், முன்னாள் அமைச்சரும் அவரது கட்சியும் அரசியலில் மிகப் பொருத்தமான அதிகார அரசியல் திருப்பத்தில் (Power Political Terminal) உள்ளது என்பது தெளிவாகும்.  

Post a Comment

0 Comments