About Me

header ads

விளாசல் ; நியூசிலாந்து வீரர் ஆறு பந்துகளில் ஆறு சிக்ஸர்



நியுசிலாந்து வீரர் லியோ காட்டர் உள்ளுர் போட்டியில் ஆறு பந்துகளில் ஆறு சிக்சர்கள் அடித்து சாதனைபுரிந்துள்ளார்.
நியுசிலாந்தின் சுப்பர்ஸ்மாஸ் போட்டியில் காட்டர் ஆறு பந்துகளில் ஆறு சிக்சர்களை அடித்து இந்த சாதனையை புரிந்த முதல் நியுசிலாந்து வீரர் என்ற சாதனையை ஏற்படுத்தியுள்ளார்.
நொதேர்ன் டிஸ்ரிக்ட் அணிக்கு எதிரான இருபதிற்கு இருபது போட்டியில் கன்டபெரி கிங்ஸ் அணிக்காக அவர் இந்த சாதனையை புரிந்துள்ளார்.
இதன் மூலம் ரி20 போட்டிகளில் ஆறு பந்துகளில் ஆறு சிக்சர்களை பெற்ற நான்காவது வீரராக இவர் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.
இடது கை சுழற்பந்து வீச்சாளர் அன்டன் டேவ்சிச்சின் ஓவரிலேயே கார்ட்டர் 36 ஓட்டங்களை பெற்றுள்ளார்.



Post a Comment

0 Comments