About Me

header ads

சாய்ந்தமருது பள்ளிவாசல் அதிரடி அறிவிப்பு ; alm சலீம் மொட்டு கட்சியில் களமிறங்குவார்



சாய்ந்தமருது சார்பில் பொதுத்தேர்தல் வேட்பாளராக ஏ.எல்.எம். சலீம்  போட்டியிடுவார் : ஜும்மா பள்ளிவாசல் தலைவர் பகிரங்க அறிவிப்பு.

நூருல் ஹுதா உமர்.

சாய்ந்தமருது நகரசபை இலக்கை அடையும் நோக்கில் போராடி வரும் குழுவினரின் ஏற்பாட்டில் சாய்ந்தமருது மண்ணின்  மாற்றம் மற்றும்  அபிவிருத்திக்கான மையம் இன்று மாலை உதயமானது. இவ்வுதய நிகழ்வில் கல்முனை தொகுதி வேட்பாளராக சாய்ந்தமருது பிரதேசத்தை சேர்ந்த  முன்னாள் சாய்ந்தமருது பிரதேச செயலாளரும்,  இலங்கை  நிர்வாக சேவை அதிகாரியுமான ஏ. எல். எம். சலீம் போட்டியிடுவார் என சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல் தலைவர் வை.எம். ஹனீபா அவர்களினால் பகிரங்கமாக அறிவிக்கப்பட்டது.

தேசிய நல்லிணக்கம், சகவாழ்வை அடிப்படையாக கொண்டும், நிலையான அபிவிருத்தி  புதிய அரசின் கோட்பாட்டையும் அடிப்படையாகக் கொண்டும் பிரதேச மக்களின் ஒருமைப்பாட்டைக் கட்டியெழுப்பி பல்லின சமூக அமைப்பில், சமூக இருப்பையும் அபிவிருத்தியையும் குறிக்கோளாகக் கொண்டு "சமூக மாற்றம் மற்றும்  அபிவிருத்திக்கான மய்யம்" என்ற தொனிப் பொருளிலான அமைப்பு இன்று சாய்ந்தமருது , கல்யாண வீதியில் அமைந்துள்ள அவ் அமைப்பின் அலுவலகம் திறக்கப்பட்டு உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

இந்நிறுவனத்தின் ஆரம்ப நிகழ்வுக்கு சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல் தலைவர் வை.எம். ஹனீபா பிரதான அதிதியாக கலந்து கொண்டார்.  சாய்ந்தமருது, மாளிகைக்காடு ஜூம்மா பள்ளிவாசல் நிர்வாகத்தினர், கல்முனை மாநகர சபை சுயேட்சைக் குழு உறுப்பினர்கள், காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் ஏ. ஆர்.எம். பஸ்மீர், புத்திஜீவிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இங்கு உரையாற்றிய கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.ஆர்.எம். அசீம், எதிர்வரும் தேர்தலில் மொட்டின் சார்பில் தான் எங்களுடைய வேட்பாளர் களமிறங்குவார் என உறுதிபட அறிவித்தார்.

Post a Comment

0 Comments