About Me

header ads

வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் இம்தியாஸ் 520 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்


பிரதேச சபை உறுப்பினர் இம்தியாஸ் அவர்களினால் 520 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது. வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் இம்தியாஸ் அவர்களின் முயற்சினால் பிரதேச சபை நிதிலிருந்து 450000ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 520 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. 

கட்டம் கட்டமாக வெவ்வேறு பகுதிகளாக பிரித்து உரியமுறையில் மாணவரக்ளுக்கு கொண்டுசேரும் வகையில் வழங்கிவைக்கப்பட்டது. 

வாழைச்சேனை அல் ஹக் விளையாட்டுக்கழகம் மூலம் அடையாளப்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு மொத்தமாக 50000 ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்களும், இம்ரான்ஸ் விளையாட்டுக்கழகத்தினால் அடையாளப்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு மொத்தமாக 40000ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்களும் அதே போன்று வாழைச்சேனை ஹீரோ லயன்ஸ் விளையாட்டுக்கழகத்தினால் அடையாளப்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 40000ரூபா பெறுமதியான உபகரணங்களும் மொத்தமாக அடையாளப்படுத்தப்பட்ட 520 விசேட தேவையுடைய மாணவர்களுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதேசசபை உறுப்பினர் இம்தியாஸ் அவர்களினால் வழங்கிவைக்கப்பட்டது.



Post a Comment

0 Comments