About Me

header ads

முஸ்லிம்களை பாதுகாக்க அரசு தவறுகிறது ; ஹரிஸ் எம்.பி பாராளுமன்றில் குற்றச்சாட்டு


-ஜே.ஏ.நௌஷாத்-

"நாட்டில் முஸ்லிம்கள் மீது திணிக்கப்படுகின்ற அதிகார அத்து மீறல்கள் நிறுத்தப்பட வேண்டும் இலங்கை ஜமாத்தே இஸ்லாமியின் தலைவர் ஹஜ்ஜுல் அக்பர் விடுவிக்கபடல் வேண்டும்" என முஸ்லிம் காங்கிரசின் பிரதி தலைவர் ஹரிஸ் பாராளுமன்றில் தெரிவித்தார். 

இன்று (05.09.2019) குழுக்களின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி அவர்களின் தலைமையில் சபை கூடி நாட்டின் பொருளாதார அபிவிருத்தி தொடர்பிலாக உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். 

மேலும் அவர் உரையாற்றுகையில் "முஸ்லிம்களின் பிரச்சனைகள் எதுவும் இவ்வரசால் தீர்க்கப்படவில்லை. அதிலும் நல்லாட்சிக்காக நாம் பெரிதும் தியாகங்களை செய்திருந்தோம். அவை எவற்றுக்கும் நமது நாட்டுக்கு எவ்விவதமான லாபமாவது கிடைத்துள்ளதா ? என கேள்வியோன்றினை தொடுக்க வேண்டியுள்ளது. 

அரசியலமைப்பு சபை, பத்தொன்பதாவது திருத்தச் சட்டம் அதன் சபை எவ்வாறு செயற்பட்டுள்ளது. போலீஸ் ஆணைக்குழு, லஞ்ச ஊழல் இவற்றில் எந்த ஆணைக்குழு  எவை சிறப்பாக இயங்கியுள்ளது என்பது மக்களின் மனதில் உள்ள கேள்வியாகும். 

கிழக்கு மாகானத்திலுள்ள திருமலை துறைமுகம், ஒலுவில் துறைமுகம் என்பன எதற்காக பாவிக்கப்படுகின்றது. கிழக்கிலுள்ள எந்த வளங்களும் இங்கு பாவிக்கப்பட வில்லை. வேலையில்லாத பட்டதாரிகளும், வெளி வாரிப் பட்டதாரிகளினதும் கண்ணீர் துடைக்கப்படல் வேண்டும். 

ஆகவே சிறுபான்மை மக்கள் விசேடமாக முஸ்லிம்கள் வருகின்ற ஜனாதிபதி தேர்தலை இலக்காக கொண்டு தமது தேவைகளை அடைந்து கொள்வதற்காக த.தே.கூ மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் என்பன இணைந்து பேச வேண்டும் எனவும் கூறினார். 


Post a Comment

0 Comments