கல்குடா முஸ்லிம்களின் நிலப்பிரச்சனைகளில் தமிழ் தரப்பு நியாயமாக நடந்து கொள்ள வேண்டும் ; அன்வர் நௌஷாத் - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:Bringing news stories from Sri Lanka

STAY WITH US

test banner

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, September 10, 2019

கல்குடா முஸ்லிம்களின் நிலப்பிரச்சனைகளில் தமிழ் தரப்பு நியாயமாக நடந்து கொள்ள வேண்டும் ; அன்வர் நௌஷாத்


இலங்கையிலுள்ள முஸ்லீம் பிரதேசங்களில் முழுதுமாக நில சுரண்டல்களை மேற்கொள்ளும் அதிகாரம்மிக்க ஆக்கிரமிப்பாளர்களையும், சிறுபிள்ளைத்தனமான அரசியல் வாதிகளையும், நாம் வன்மையாக கண்டிக்கிறோம் என முஸ்லிம் காங்கிரசின் கல்குடா தொகுதி இணைப்பாளரும், CASDRO அமைப்பின் தலைவருமான அன்வர் நௌஷாத் தெரிவித்துள்ளார். 

கல்குடாத் தொகுதியிலுள்ள முஸ்லீம்களின் நிலப்பிரச்சனைகளை பெரிதும் அரசியலுக்கான தீனியாக்கி அதில் தமது சுய நலன்களை அடைந்து கொல்ல்லுகின்றவர்களை நாம் பெரிதும் அடையாளம் கண்டிருக்கின்றோம். கௌரவ. வியாலேந்திரன் MP, மற்றும் முன்னாள் அமைச்சர் முரளிதரன் ஆகியோர் முஸ்லிம்களை நிந்தித்து தமது அரசியலை நகர்த்தி செல்ல ஆசைப்படுகிறார்கள். அது தமிழ் மக்களின் முடிவுமல்ல, தமிழ் மக்கள் அவ்வாறானவர்களும் அல்ல, அவர்களிடம் தெளிவான தெரிவுகள் உண்டு.

ஓட்டமாவடி பிரதேச செயலக எல்லைக்குற்பட்ட சுமார் 200 சதுர கிலோமீற்றர் காணியை ஆயுதமுனையில் கபளீகரம் செய்தமையும், கோரளைப்பற்று மத்திக்கு வழங்கப்பட்ட சுமார் 200 சதுர கிலோமீற்றர் காணியை இது வரை வழங்காமல் இழுத்தடிப்பு செய்வதும் மிக அநியாயமானது. அது மாத்திரமின்றி மொத்த சனத்தொகையில்  27 வீதமான மக்களை வெறும் 1.4 வீதமான நிலப்பரப்பினுள் அடக்கி ஆழ நினைப்பது மிக மோசமான மனித உரிமை மீறலாகும். 

நிதானமாக சிந்திக்கின்ற போது மட்டகளப்பில் வாழும் 27 வீதமான முஸ்லிம் மக்களுக்கு எவ்வாறான தீர்வொன்றினை வழங்க வேண்டும் என்கின்ற முடிவு தமிழ் தரப்பால் எடுக்கப்படும். அவ்வாறான சுயாதீனமான மக்கள் பிரதிநிதிகளை உள்ளடக்கிய சமூகமாக நாம் கலந்துரையாடல் மூலமாக தீர்ப்பொன்றினை  அடைந்து கொள்ள தயாராக உள்ளோம். 

தமது அரசியல் பிழைப்புக்காக கல்லால் எறிவதும், சண்டித்தனம் பேசுவதும் எவ்வளவு தூரம் அவர்களின் அரசியல் முதிர்ச்சித் தன்மை கொண்டது என்பதற்கு உதாரணமாகும். முஸ்லிம்களின் அரசியல் தலைமையான அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களின் இனப்பாகுபாடற்ற அரசியல் செயற்பாடுகள் அனைத்து அரசியல் தரப்புக்கும் முன்னுதாரணமாகும். அவர்கள் கற்றுக் கொள்வதற்கான நிறைய படிப்பினைகள் முஸ்லிம் அரசியல் வாதிகளிடம் நிறையவே உண்டு.

மட்டக்களப்பு முஸ்லிம்கள் தமிழ் மக்களின் எல்லா போராட்டங்களிலும் எல்லா வகையிலும் பங்கு கொண்டவர்கள். அதனை தமிழ் மக்கள் மறந்துவிடக்கூடாது. எனவும் அவர் கூறினார். 

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages