About Me

header ads

மீறாவோடையில் தமிழ்விஷமிகளால் வேலிகள் சேதம் : நீதிமன்றத் திர்ப்பினையும் மீறி அட்டூழியம்


ஓட்டமாவடி செய்தியாளர் அ.ச.மு சதீக் 

கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட மாஞ்சோலை-பதுறியாவில் அமைந்துள்ள முஸ்தபா லெப்பை றகுமா பீவி என்பவருடைய காணியின் வேலிகள் சேதப்படுத்தப்பட்டுள்ளது. 

மட்/ககு மீராவோடை சக்தி வித்தியாலய மைதானத்துக்கு அருகாமையிலுள்ள முஸ்தபா லெப்பை றகுமா பீவி என்பவருடைய காணி பாடசாலை காணி என்றும், சக்தி வித்தியாலய  பாடசாலை அபிவிருத்திக்குழுவும் அப்பாடசாலை அதிபரும் வாழைச்சேனை நீதவான் நீதிமன்றில் வழக்கத் தாக்கல் செய்திருந்தனர்.

அவ்வழக்கு தீர்ப்பு காணி உரிமையாளரான முஸ்தபா லெப்பை றகுமா பீவிக்குரிய காணியென்று  நீதிமன்றால் விளம்பல் செய்யப்பட்டது.

அக்காணி உரிமையாளரான றகுமா பீவி கருத்து தெரிவிக்கையில், 
அக்காணியில் நானும் மற்றும் என்னுடைய பிள்ளைகளும் பிறந்தது முதல் வாழ்ந்து வருவதாகவும் யுத்த காலத்தில் குடிபெயர்ந்து பின்னர் சமாதானச் சூழ்நிலையில் திரும்ப மீளக்குடியேறிதாகவும் குறிப்பிட்டார். 

அவர் மேலும் கூறுகையில், 
தாங்கள் அங்கு மாற்றின தமிழ் சகோதரர்களில் ஒரு சிலர் தொடர்ச்சியாக குடியிருக்கும் போது அருவருக்தக்க பொருட்களான சிறுநீரை பைகளில் கட்டி எறிவதாகவும் மற்றும் வேலிகளை அடிக்கடி சேதப்படுத்துவதாகவும் கற்களால் வீசுவதாகவும் குறிப்பிட்டார். 

நேற்று 30.08.2019ம் திகதி வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகைக்காக ஆண்கள் பள்ளிவாயலுக்குச் சென்ற பின்னர், எமது வேலிகளை ஒரு சிலர் வந்து சேதப்படுத்தினார்கள். அச்சந்தர்ப்பத்தில் பயத்தின் காரணமாக நாங்கள் இவ்விடத்தை விட்டு சென்று விட்டோம் என்றும் குறிப்பிட்டார். இது தொடர்பாக வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

Post a Comment

0 Comments