அனைத்து சந்தர்ப்பத்திலும் இந்தியா இலங்கைக்கு ஆதரவு வழங்கும் - தரன்ஜித் சிங் சந்து - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, August 15, 2019

அனைத்து சந்தர்ப்பத்திலும் இந்தியா இலங்கைக்கு ஆதரவு வழங்கும் - தரன்ஜித் சிங் சந்து


பாயங்கரவாத்திற்கு எதிரான செயற்பாடுகளில் இந்தியா அனைத்து சந்தர்ப்பத்திலும் இலங்கைக்கு ஆதரவை வழங்கும் என்று தெரிவித்த உயர் ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்து, அண்மையில் பயங்கரவாத தாக்குதலை எதிர்கொண்டிருந்த இலங்கை மக்களுக்கும் உறுதியான ஆதரவை வழங்கும் என்றும் குறிப்பிட்டார். 
இந்தியாவின் 73 ஆவது சுதந்திர தின நிகழ்வு இன்று கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 
சுதந்திர தின வாழ்த்துக்களை உங்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்ளும் அதே வேளை , அண்மையில் பயங்கரவாத தாக்குதலை எதிர்கொண்டிருந்த இலங்கை மக்களுக்கு நாம் எமது உறுதியான ஆதரவை என்றும் வெளிப்படுத்தி நிற்கின்றோம். இந்திய பிரதமர் நரேந்திர மோடி கூறியதை போலவே ,  இந்தியா எப்பொழுதும் இலங்கையுடன் தனது உறுதியான ஆதரவை பகிர்ந்துகொள்ளும் என்றும் இதன்போது இந்திய உயர்ஸ்தானிகர் மேலும் குறிப்பிட்டார்.   
இந்திய சுதந்திர தின நிகழ்வுகள் இன்று காலை 8.30 மணியளவில் ஆரம்பமாகின. இராணுவ அணிவகுப்பு இடம்பெற்றதோடு இந்திய உயர்ஸ்தானிகரால் இந்திய தேசிய கொடி ஏற்றி வைக்கப்பட்டது. கொடி ஏற்றி வைக்கப்பட்டதன் பின்னர் உரை நிகழ்த்திய உயர் ஸ்தானிகர் அவரது உரையைத் தொடர்ந்து இந்திய ஜனாதிபதி ராம் நாத் கோவிந்தின் சுதந்திர தின செய்தியை வாசித்தார்.
தொடர்ந்து இந்திய பாரம்பரிய கலை நடனம் உள்ளிட்ட கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன. இந் நிகழ்வில் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டார்கள். 
சுதந்திர தின நிகழ்வை முன்னிட்டு கொழும்பு 3, குமாரதுங்க முனிதாச வீதியில் போக்குவரத்து மட்டுப்பட்டிருந்ததோடு, இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages