அன்வர் நௌஷாத் அவர்களின் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்து - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, August 11, 2019

அன்வர் நௌஷாத் அவர்களின் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துஉலகும் முழுவதும் ஏகமாய் காக்கும் வல்லோன் இறையே வான்புகழ் அல்லாஹ்வே ஏக இறைவன் என  நம்புவதும் அவனை வணங்குவதும்,அவனுக்காக எந்த தியாகத்தையும் செய்வதும் இறை நம்பிக்கையின் அடையாளமாகும். மனிதனை கெடுக்கும் பேராசை,பொறாமை,அகங்காரம்,ஆணவம்,பகைமை போன்ற பாவக் கறைகளை விட்டு மனித மனங்களை சுத்தப்படுத்துவதற்குறிய உயரிய நாளாகவே இத்தினம் பார்க்கப்பட வேண்டும்.

என கல்குடா தொகுதியின் முஸ்லிம் காங்கிரஸ் இணைப்பாளர் அன்வர் நௌஷாத் விடுத்துள்ள ஹஜ் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். 


மேலும், ஹஜ் போதிக்கும் தத்துவங்களை ஒவ்வொருவரும் தமது வாழ்வில் கடைப்பிடிப்பாராயின் முஸ்லிம் சமூகத்தில் ஒருபோதும் பிளவுகளோ பிணக்குகளோ ஏற்பட வாய்ப்பிருக்காது. தவிரவும் இறையச்சத்துடன் தீய நடத்தைகளைத் தவிர்த்து, நற்செயல்களில் ஈடுபடுபவர்களாகவும் துன்ப, துயரங்களின்போது பொறுமை, சகிப்புத்தன்மையை கடைப்பிடிப்பவர்களாகவும் எந்தவொரு மனிதரிடமும் விரோதம், குரோதம், பகைமை பாராட்டாமல் அனைவருடனும் நல்லெண்ணத்தை வெளிக்காட்டுபவர்களாகவும் நாம் மாறுவதற்கு ஹஜ் வழிகாட்டுகிறது. 

இன்றைய எமது நாட்டுச் சூழலில் முஸ்லிம்கள், மாற்று இனங்களை சேர்ந்த சகோதரர்களுக்கு முன்மாதிரி மிக்க மனிதர்களாக வாழ்வதன் மூலமே, அவர்கள் எம்மீது கொண்டிருக்கின்ற தப்பபிப்பிராயங்கள் களையப்பட்டு, புரிந்துணர்வும் சகவாழ்வும் நிலையான அமைதியும் உருவாக வாய்ப்பேற்படும்.

அத்துடன் இவ் இக்கட்டான சூழலில், எமது மார்க்கம் எமக்கு கற்றுத்தந்த வழிமுறையினை பின்பற்றி இந்த பெருநாள் கொண்டாட்டங்களை அமைத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்வதோடு இன்றைய தினம் புனித ஹஜ் பெருநாளினைக் கொண்டாடக்கூடிய அனைத்து உலகவாழ் முஸ்லிம்களுக்கும் புனித  ஹஜ் பெருநாள் நழ்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன் எனவும் குறிப்பிட்டுள்ளார். 
.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages