வாழைச்சேனை Y.அஹமட் வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழா - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:Bringing news stories from Sri Lanka

STAY WITH US

test banner

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Friday, July 19, 2019

வாழைச்சேனை Y.அஹமட் வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழா



(எச்.எம்.எம்.பர்ஸான்)
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட வாழைச்சேனை வை.அஹமட் வித்தியாலயத்தில் கடந் வருடம் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களையும் சிறப்புப்பெறுபேறுகளைப் பெற்றுக் கொண்ட மாணவர்களையும் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு நேற்று (18) இடம்பெற்றது.
பாடசாலையின் அதிபர் என்.எம்.ஹஸ்ஸாலி தலைமையில் பாடசாலை பிரதான மண்டபத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அதிதிகளாக மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப்பணிப்பாளர் டொக்டர் எஸ்.எம்.எம்.எஸ்.உமர் மௌலானா, பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான எம்.எல்.ஏ.ஜுனைத், வீ.ரீ.அஜ்மீர் மற்றும் உதவிக் கல்விப்பணிப்பாளர்களான எம்.ஐ. அஹ்ஸாப், எம்.யூ.இஸ்மாயில், ஓட்டமாவடி கோட்டக் கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.கே.ரகுமான், வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலை அதிபர் ஏ.எம்.எம்.தாஹிர் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் மாணவர்களின் கலை, கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றதோடு, மாணவர்களுக்கு பரிசில்களும் சான்றிதழ்களும் அதிதிகளினால் வழங்கிக் கெளரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages