About Me

header ads

இப்போதைக்கு மாகாண சபைத்தேர்தல் இல்லை ; அகில விராஜ் திட்டவட்டம்


அரசியலில் ஏற்பட்டுள்ள இழுபறி நிலை அடங்க வேண்டுமாயின் ஜனாதிபதி தேர்தலை நடாத்துவதே பொருத்தமானதாகும் என ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச்செயலாளர் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதி தேர்தலொன்ருக்கு முன்னதாக மாகாண சபை தேர்தலை நடாத்த எடுக்கப்பட்டு வரும் முயற்சிகளை நாம் கண்டு கொள்ளப்போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

அதேவேளை போதுபெரமுன கட்சியின் முக்கியஸ்தர் ஒருவரும் தமது கட்சி இப்போதைக்கு மாகாண சபை தேர்தலோன்றினை விரும்பவில்லை என ஆங்கில ஊடகமொன்றிற்கு தெரிவித்திருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments