மு.கா வின் முடிவு முஸ்லிம்களை தலை நிமிர செய்துள்ளது ; கல்குடா மு.கா. இணைப்பாளர் அன்வர் நௌஷாத் - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:Bringing news stories from Sri Lanka

STAY WITH US

test banner

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, July 21, 2019

மு.கா வின் முடிவு முஸ்லிம்களை தலை நிமிர செய்துள்ளது ; கல்குடா மு.கா. இணைப்பாளர் அன்வர் நௌஷாத்


ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் இன்று எடுத்துள்ள முடிவானது இலங்கை முஸ்லிம்கள் என்றும் தலை நிமிர்ந்து வாழ வழிவகை செய்யும், இதற்காக நாம் நமது தலைவரையும், பாராளுமன்ற உறுப்பினர்களையும் கௌரவிக்க கடமைப்பட்டுள்ளோம் என கல்குடாத்தொகுதி முஸ்லிம் காங்கிரஸ் இணைப்பாளர் அன்வர் நௌஷாத் தெரிவித்தார். 

இன்று 21.07.2019 ஞாயிற்று கிழமை பி.ப 7.00 மணியளவில் மீராவோடை மேற்கு வட்டார அமைப்பாளர், பிரதேச சபை உறுப்பினர் அல்ஹாஜ் : எம்.எஸ்.பதுர்தீன் அவர்களின் தலைமையில் மீராவோடையில் இடம்பெற்ற வட்டாரக் குழு தெரிவின் போதே இவ்வாறு தெரிவித்தார். 

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், "முஸ்லிம் காங்கிரஸ் இன்று முஸ்லிம்களிடையே ஐக்கியத்தையும், பாதுகாப்பு உணர்வினையும் விதைத்து வருகின்றது.  கடந்த ஏப்ரல் தாக்குதலின் பின்னர் கட்டவிழ்த்து விடப்பட்ட இனவாதம் இன்று அதன் உச்ச நிலையில் தலை விரித்து ஆடுகின்றது. முஸ்லிம் மக்கள் ஆயுதமற்ற நிராயுத பாணிகள் என மீண்டும் ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மு.கா இலங்கையில் முஸ்லிம் சமூகத்தின் தேவைகளை நிறைவேற்ற அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றது. 

இந்நிலையில், சமூகத்தின் அவல நிலையையும் பொருட்படுத்தாது, நன்றியுடன் நோக்க வேண்டிய விடயங்களையும் விடுத்து எமது சில அரசியல் தலைமைகள் செயற்படுகின்ற விதம் மிக கவலைக்குரியதாகும். அவர்கள் யதார்த்தங்களை மீறி முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமையை குலைக்க முற்படுகின்றனர். நீரே இல்லா தடாகத்தில் நீச்சலடிக்கின்றனர். அவர்களுக்கும் நமது சமூகம் எதிர்காலங்களில் பாடம் புகட்ட வேண்டும் எனவும் கூறினார். 

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages