முஸ்லிம் எம்.பிக்கள் அவசர கூட்டம் ; பிரதமரை சந்திப்பார்களா ??? - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, July 22, 2019

முஸ்லிம் எம்.பிக்கள் அவசர கூட்டம் ; பிரதமரை சந்திப்பார்களா ???நேற்றைய தினம் முஸ்லிம் காங்கிரசின் உச்ச பீடம் எடுத்த முடிவுக்கு அமைவாக விரைவில் பிரதமருடன் பேச்சு வார்த்தை ஒன்றை அக்கட்சி ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

இதன் ஆரம்பக்கட்டமாக இன்று முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிரேஷ்ட்ட பாராளுமன்ற உறுப்பினர் எ.எச்.எம்.பௌசி அவர்களின் இல்லத்தில் கூடவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. 

முஸ்லிம் சமூகத்தின் பிரச்சனைகளை முன்னிறுத்தி தமது பிரதவிகளை ராஜினாமா செய்துள்ள அனைத்து அமைச்சர்களுக்கும் முஸ்லிம் சமூகம் தனது மனப்பூர்வமான ஆதரவினை தெரிவித்துள்ளதுடன், சுதந்திரமாகவும், சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு  செயற்படுவதற்கான அங்கீகாரத்தினையும் அரசியல் தலைமைக்கு வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் நிறைந்துள்ளது. 

  • அனாவசிய தடுத்து வைப்புக்கள்/விடுதலைகள் 
  • அனாவசிய நெருக்குதல்கள் / மத நிந்தனை பேச்சுக்கள் 
  • நிலம் தொடர்பிலான முடிவுகள் 
  • கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் 
  • கோறளை மத்தி செயலகம் 
  • கோறளை மேற்கு செயலகம் 
  • தோப்பூர் உப செயலகம் 


போன்ற விவகாரங்கள் தொடர்பில் அரசுடன் நீண்ட இழுபறியற்ற பேச்சுகளை தொடர வேண்டும் என்பதும் அமைச்ப் பொறுப்புக்களும் பாரம் எடுக்கப்படல் வேண்டும் எனவும் மக்களால் எதிர்பார்க்கப்படுகின்றது குறிப்பிடத்தகதாகும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages