About Me

header ads

முஸ்லீம்கள் மீதான வீண்பழியை மு.கா வின் தலைமை துடைத்தெறிந்துள்ளது ; அன்வர் நௌஷாத்


- சத்தாம் -

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைமையே இன்று இலங்கையிலுள்ள முழு முஸ்லிம் சமூகத்திற்கும் தலைமை தாங்குகின்றது, அத்துடன் சிக்கலான சந்தர்ப்பங்களில் சமூகத்தின் மீதான பழி துடைப்பதில் தலைமையின் சாணக்கியம் வெளிப்பட்டுள்ளது என மு.கா வின் கல்குடா தொகுதிக்கான இணைப்பாளர் அன்வர் நௌஷாத் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் காங்கிரஸ் வட்டாரக்குழுக்களை அமைக்கும் நிகழ்ச்சி நிரலில் ஓட்டமாவடி மூன்றாம் வட்டாரத்திற்கான குழு அமைக்கும் நடவடிக்கைகள் இன்று (2019.07.03) புதன் கிழமை இஷாத் தொழுகையின் பின்னர் 3ம் வட்டார அமைப்பாளர் மௌலவி.எம். முஸ்தபா அவர்களின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வின் போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

மேலும் அவர் கருத்து வெளியிடுகையில் “நாம் தேர்தல் ஒன்றினை இலக்காக கொண்டு செயற்பட வில்லை. நமது பிராந்தியத்தில் கட்சிப் பணிகளை முன்னெடுக்கும் ஆர்வத்துடனேயே இவ்வாறு செயற்படுகின்றோம். அமைப்பாளர் சகோ. ரியால் நமது பிரதேசத்தின் வளமான ஆளுமை, அவரை பயன்படுத்தி நமது மக்களின் தேவைகளில் முடியுமானவற்றை தீர்க்க முயற்சிக்கின்றோம்.

கட்சியின் வளர்ச்சியில் எரிச்சலடையும் சிலர் உள்ளக குழப்பங்களை உருவாக்குவதன் மூலமாக அவர்களது அரசியலை தக்க வைக்க முயற்சிக்கின்றனர். இவற்றையெல்லாம் நாம் முகங்கொடுக்கும் வல்லமையை கொண்டிருக்கின்றோம். இன்ஷா அல்லாஹ் மாற்றத்திற்கான கோசத்தின் வெளிச்சத்தில் நமது கல்குடா மண் வெளிச்சம் பெரும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.
அதேவேளை கட்சியின் தலைமை இன்று இந்நாட்டின் முழு இஸ்லாமிய சமூகத்தினதும் பாதுகாப்பினையும், எதிர்காலத்தினையும் இலக்காக கொண்டு செயற்படுகின்றது.

விசேடமாக நமது பிரதேச அபிவிருத்தி நடவடிக்கைகளில் நமது தலைமையுடன், முன்னாள் ராஜாங்க அமைச்சரும் நமது மாவட்ட பாராளுமன்ற பிரதிநிதியுமான அல்ஹாஜ் அஸ்செய்யித் அலி ஸாகிர் மௌலானா அவர்களின் பங்களிப்பு மிக இன்றியமையாதது. அதேவேளை முன்னாள் ராஜாங்க அமைச்சர்களான பிரதித் தலைவர் எச்.எம்.எம். ஹரிஸ் எம்.பி, பைசால் காசிம் எம்.பி, ஏ.எல்.எம். நஷீர் எம்.பி ஆகியோரின் பங்களிப்பும் காத்திரமானது. நமது பிரதேசத்தில் இவர்களின் கரிசனை மிக இன்றியமையாத அபிவிருத்திப் பணிகளை தீர்ப்பதற்கு துணை புரியுமேன்பதில் ஐயமில்லை.

நமது உள்ளூராட்சி உறுப்பினர்களின் தேடல்கள் வெற்றி பெறத் தொடங்கியுள்ளன. உங்களுக்காக அவர்கள் பெரிதும் அக்கறையுடன் செயற்படுகின்றார்கள். அவர்களுக்காக எவ்வகையான உதவிகளையும் செய்யத் தயாராக நமது தலைமை உள்ளது”. எனவும் தெரிவித்தார்.

பிரதேச சபை உறுப்பினர்களான கௌரவ. எம்.ரீ.எம். அன்வர், ஹாமித் மௌலவி, ஆகியோருடன் வட்டார அமைப்பாளர்களான கலீலுர் ரஹ்மான் (RDO), மற்றும் எம்.எம். ரனீஸ் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.     

Post a Comment

0 Comments