About Me

header ads

உயிர் அச்சுறுத்தல் உள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளமை தேசிய பாதுகாப்பின் பலவீனத்தை வெளிப்படுத்துகின்றது - மஹிந்தானந்த


தனக்கு உயிர் அச்சுறுத்தல் உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  குறிப்பிட்டுள்ளமை தேசிய பாதுகாப்பு  எந்த அளவிற்கு பலவீனமாக உள்ளது என்பதை தெளிவுப்படுத்துகின்றது. 
புலனாய்வு பிரிவின் ஊடாக கிடைக்கப் பெற்ற  இரகசிய தகவல்களை ஜனாதிபதி  நாட்டு மக்களுக்கு  பகிரங்கப்படுத்த வேண்டும்.  என பாராளுமன்ற உறுப்பினர்  மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதை தொடர்ந்து தனக்கு உயிர் அச்சுறுத்தல் காணப்படுவதாகவும், இத்தகவல்களை புலனாய்வு பிரிவினரிடமிருந்து கிடைக்கப் பெற்றதாகவும்,  ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளமை கவனிக்கத்தக்கது.  
 நாட்டு தலைவர்,  முப்படைகளின் பிரதானியாக உள்ள ஜனாதிபதிக்கு  பாதுகாப்பு இல்லாவிடின்  நாட்டு மக்களுக்கு எவ்வாறு  பாதுகாப்பு  பலப்படுத்தப்படும். ஜனாதிபதியின் கருத்தினை தொடர்ந்து  தேசிய  பாதுகாப்பின் பலவீனம்  தெளிவுப்படுத்தபபட்டுள்ளது என அவர் தெரிவித்தார்

Post a Comment

0 Comments