About Me

header ads

முஸ்லிம் காங்கிரஸ் + மக்கள் காங்கிரஸ் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழு சந்திப்பு


ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அறிக்கையிடும் மனித உரிமை செயற்பாட்டாளர் Clément Nyaletsossi Voule தலைமையிலான குழுவினர் இன்று (24) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான பாராளுமன்ற உறுப்பினர்களை பாராளுமன்றத்திலுள்ள மு.கா. கட்சி காரியாலயத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.

இச்சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.எச்.எம். பௌசி, றிஷாத் பதியுதீன், எச்.எம்.எம். ஹரீஸ்,ஏ.எல்.எம்.நஸீர், பைசால் காசிம், அலிஸாஹிர் மௌலானா, எம்.ஐ.எம். மன்சூர், எம்.எஸ். தௌபீக், அப்துல்லாஹ் மஹ்ரூப் ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் எதிர்வரும் 2020 ஜூன் மாதம் மனித உரிமைகள் பேரவையின் 44ஆவது அமர்வின்போது தனது இலங்கை வருகை குறித்த விரிவான அறிக்கையை சமர்ப்பிப்பார்.

Post a Comment

0 Comments