About Me

header ads

"சோபா" வால் நாட்டுக்கு எவ்வித நமையும் இல்லை



படைகளின் அந்தஸ்த்து ஒப்பந்தத்தின் (சோபா) மூலமாக அமெரிக்க படை களுக்கு எமது நாட்டுக்குள் கட்டற்ற சுதந்திரமும், எமது வளங்களைப் அபகரிக்கும் அங்கீகாரமும் வழங்கப்படுமே தவிர, அதனால் நாட்டுக்கு எந்தவொரு அனுகூலமும் இல்லை என்று இராணுவத்தினரின் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்திருக்கிறார்.
அமெரிக்க அரசாங்கத்துடன் இலங்கை செய்துகொள்ள உத்தேசித்திருக்கும் சோபா ஒப்பந்தத்தின் உள்ளடக்கங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதில் அடங்கியுள்ள விடயங்கள் நாட்டின் இறையாண்மையையும், சுயாதீனத்துவத்தையும் பாதிக்கும் வகையில் அமைந்துள்ளதாகப் பலராலும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் இத்தகைய கருத்துக்களுக்கு மறுப்புத் தெரிவித்ததுடன், இலங்கையுடன் அமெரிக்க மேற்கொள்ளும் ஒப்பந்தங்கள் இலங்கையின் இறையாண்மைக்கு மதிப்பளிக்கும் வகையிலேயே முன்னெடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இலங்கை அமெரிக்காவுடன் செய்துகொள்வதற்கு எதிர்பார்த்திருக்கும் ஒப்பந்தங்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக கருத்துக்களை வெளியிட்டுவரும் நிலையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சோபா உடன்படிக்கைக்கு அடுத்ததாக அமெரிக்காவுடன் கைச்சாத்திடத் திட்டமிட்டிருக்கும் எக்ஸா மற்றும் மிலேனியம் சவால் ஒத்துழைப்பு ஆகிய ஒப்பந்தங்களும் நாட்டிற்கு பாதிப்பையே ஏற்படுத்தும் என்றும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார். 

Post a Comment

0 Comments