நமது பிரச்சனைகளை பேச தலைமை அமைச்சரவையில் இருக்க வேண்டும் ; பைசால் காசிம் எம்.பி - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, July 31, 2019

நமது பிரச்சனைகளை பேச தலைமை அமைச்சரவையில் இருக்க வேண்டும் ; பைசால் காசிம் எம்.பி
ஏலவே, பெரும்பான்மை கட்சிகளின் ஆளுக்காள் குழிபறிக்கும் அரசியலில், சிறுபான்மை இனங்களின் நலன்கள் பாதிக்கப்படுவதோடு, முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வின்றி இழுபடுகின்ற சூழ்நிலையில், திடிரென உருவாகி இருக்கும் மாகாண சபைகள் தேர்தல்களுக்கான நகர்வு, முஸ்லிம் அரசியலின் இன்றைய நிலைப்பாடுகளை இப்புதிய சூழலுக்கு முகங்கொடுக்கும் வகையிலும் மாற்றிக்கொள்ள வேண்டிய அவசியத்தை வேண்டி நிற்கிறது என பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் தெரிவித்தார் 

இலங்கை அரசியல் பரப்பில் புதிதாக தோன்றியிருக்கும் மாகாண சபை தேர்தல் நகர்வுகள் தொடர்பாக எமது இணைய செய்தி சேவை அவரை தொடர்புகொண்டு கேட்ட போதே மேற்கண்டவாறு கூறினார். 

அவர் மேலும் கூறுகையில், ஜனாதிபதி தேர்தலை முகங்கொடுக்க நாடே தயாராகி வருகின்ற சூழ்நிலையில், இடையில் மாகாண சபைகளுக்கான தேர்தல் முஸ்தீபினை செய்து, ஜனாதிபதி தேர்தலை குழப்பியடித்து மீண்டும் நாட்டில் அரசியல் ஸ்தீரமற்ற தன்மையை உருவாகும் அபாயம் கண்முன்னே தெரிகிறது. இது முஸ்லிம்களையும் பழிகேட்கும் அபாயமும் இருக்கிறது. 

மாகாண சபை தேர்தல்கள் பழைய விகிதாசார முறையில் நடாத்தப்பட வேண்டும் என்பதிலும், அதில் ஒட்டுமொத்த முஸ்லிம்களின் நலன்களும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதிலும் நாங்கள் மிகத்தெளிவாக இருந்தே, மாகாண சபைகள் தேர்தல் முறை தொடர்பான திருத்த சட்டத்தை பிற்படுத்தி வைத்தோம். ஆனால், ஈஸ்டர் குண்டுவெடிப்பிற்கு பின்னர் முஸ்லிம் கட்சிகளின் தலைமைகள் தமது அமைச்சர் பதவிகளை இராஜினாமா செய்திருக்கின்ற இன்றைய சூழலில், மாகாண சபைகள் தேர்தல் தொடர்பான விடயங்கள் அமைச்சரவையில் கொண்டு வரப்படுகின்ற போது, அங்கு முஸ்லிம் கட்சிகளின் தலைமைகள் இல்லாதிருப்பது ஆபத்தான ஒரு விடயமாகும். 

 அதுமட்டுமல்லாமல், முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளுதல், மத்ரசா கல்வி முறையில் புதிய திட்டங்களை அறிமுகம் செய்தல் தொடர்பில், கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், ஒரு சில முஸ்லிம் அல்லாத அமைச்சர்கள் அதிமேதாவித்தனமாக நடந்துகொண்டதை நாம் அறியக்கூடியதாக இருந்தது. அவர்களுக்கு தகுந்த பதில் கூற அமைச்சரவையில் முஸ்லிம் கட்சி தலைமைகள் இல்லாமல் இருந்தமை அவர்கள் இவ்வாறு நடந்துகொள்ள ஏதுவாக அமைந்துவிட்டது. அதுமட்டுமில்லாமல், கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயத்தில் வேண்டப்படாதவர்களின் தலையீடுகள் அதிகரிப்பதற்கும் அமைச்சரவையில் முஸ்லிம் காங்கிரஸின் தலைமை இல்லாமல் இருப்பதும் ஒரு காரணமே. இவ்விடயத்தை பிரதமருடன் நேற்றைய தினம் நடந்த கூட்டத்தில் தெளிவாக சுட்டிக்காட்டினோம். கல்முனை விடயத்தில் இரு சமூகங்களும் திருப்திப்படும் வகையிலான முன்மொழிவுகளை பேசி தீர்க்கமான கட்டத்திற்கு வந்துள்ளோம். 

ஆனால், இவை எல்லாவற்றையும் விட இன்று திடிரென தோன்றியிருக்கும் மாகாண சபைகள் தேர்தலுக்கான நகர்வு என்பது முஸ்லிம் சமூகத்தை பொறுத்த வரை மிக அபாயகரமானதாகும். அதனை முகங்கொடுக்க உடனே தயாராக வேண்டும். இதனை நாம் எமது தலைவரின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதோடு, தீவிர ஆலோசனையிலும் ஈடுபட்டுள்ளோம். 

இது ஆறப்போடும் விடயமல்ல. சுடச்சுட கையாளப்பட வேண்டிய விடயம் என்பதையும் கூறி இருக்கிறோம். ஏனைய முஸ்லிம் பிரதிநிதிகளோம் கட்சிகளோடும் பேசிகின்றோம். எல்லோரும் இணைந்து அவசர முடிவுகளை எடுக்க அழுத்தம் கொடுத்திருக்கின்றோம். இன்று நல்ல ஒரு முடிவு எட்டப்படுமென நம்புகிறோம். பொறுத்திருந்து பார்ப்போம் என்றும் கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages