முஸ்லிம்களின் உயிர், உடமைகளுக்கு உத்தரவாதமில்லை – அலி ஸாஹிர் மௌலானா எம்பி - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:Bringing news stories from Sri Lanka

STAY WITH US

test banner

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, July 3, 2019

முஸ்லிம்களின் உயிர், உடமைகளுக்கு உத்தரவாதமில்லை – அலி ஸாஹிர் மௌலானா எம்பி



எஸ்.எம்.எம்.முர்ஷித்முஸ்லிம்கள் வைத்தியசாலை, வியாபார நடவடிக்கை மற்றும் ஏனைய விடயங்களுக்குப்போகும் நேரத்தில் ஏதோவொரு அடிப்படையில் பேசுவதும், சந்தேகக்கண்ணோடு பார்ப்பதுமாக இருக்கின்றதென முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா தெரிவித்தார்.
ஓட்டமாவடி பிரதேச செயலகப்பிரிவிலிருந்து சமுர்த்தி முத்திரை பெறுவதற்கு தெரிவானவர்களுக்கான உரித்துப் பத்திரங்களை வழங்கும் நிகழ்வு மீராவோடை அமீர் அலி மண்டபத்தில் கடந்த 01.07.2019ம் திகதி திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றுகையில் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
எவ்வாறான சவால்கள் வந்தாலும் எங்களது சமுதாயத்தை எல்லா வகையிலும் வலுவூட்டுவது எங்களது கடமையாகும். இப்போது பொருளாதார ரீதியாக மாத்திரமல்ல, பொருளாதார ரீதியாக இருந்தவர்களின் பொருள் எல்லாவற்றுக்கும் எந்தவிதமாக உத்தரவாதமுமில்லை. உடமைகள், உயிர்களுக்கும் உத்தரவாதமில்லை.
நாங்கள் தலை நிமிர்ந்து கௌரவமாக பல இடங்களுக்குச் செல்கின்ற நேரத்தில், வியாபாரங்களை மேற்கொள்ளும் போது, வைத்தியசாலை மற்றும் ஏனைய விடயங்களுக்குப்போகும் நேரத்தில் எங்களை ஏதோவொரு அடிப்படையில் பேசுவதும், சந்தேக கண்ணோடு பார்ப்பதுமாக இருக்கின்றது.
அண்மையில் வைத்தியசாலையொன்றில் பிள்ளை பிறந்துள்ளதைப் பார்ப்பதற்கு அவருடைய மாமனார் போகும் போது, தாதியர் ஒருவர் கூறினார். இன்னுமொரு சஹ்ரான் பிறந்துள்ளான் என்று. இவ்வாறு சொல்கின்றளவுக்கு எமது நிலைமையுள்ளது. இவ்வாறு முகங்கொடுக்கக்கூடிய நிலைப்பாட்டில் நாங்கள் இருக்கின்றோம்.
இந்நிலைமைகள் மாறும். இதனைச் சீர்செய்ய வேண்டும். பல சவால்கள் வந்த நேரத்திலும், பல பொய்களைக்கூறி, வைத்தியர்களைக்கூட வீணாகப்பழி சுமத்திய நிலைமைகளெல்லாம் மாறி உண்மைகள் வெளிவருகின்றது.
உங்களது பிரதிநிதிகளாக எங்கெல்லாம் உங்களது குரல்களை, பிரச்சனைகளை எந்த அடிப்பiயில் முகங்கொடுக்க வேண்டுமோ, அந்த கடமையை நாங்கள் செய்து கொண்டிருக்கின்றோம். நாங்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து பதவிகளையும் துறந்து மக்கள் பிரதிநிதிகளாக வந்திருக்கின்றோமே தவிர, அரசாங்கம் தந்த அமைச்சுப்பதவிகளையெல்லாம் நாங்கள் துறந்து விட்டு அரசாங்கத்திற்கு இவ்வாறான விடயங்களைச் செய்தாக வேண்டுமென்ற அடிப்படையில் எங்களது மூச்சாக ஒவ்வொன்றாக நடக்கக்கூடிய நிலைமைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றோம் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages