த தே.கூ அரசாங்கத்திற்கு அடிபணிந்து செயற்படப்போவதில்லை : செல்வம் அடைக்கலநாதன் - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:Bringing news stories from Sri Lanka

STAY WITH US

test banner

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, July 23, 2019

த தே.கூ அரசாங்கத்திற்கு அடிபணிந்து செயற்படப்போவதில்லை : செல்வம் அடைக்கலநாதன்


தமிழ்  தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு அடிபணிந்து நடக்கப்போவதில்லை என்று கூறிய தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி  மாவட்ட பாராளுமன்ற  உறுப்பினர்  செல்வம் அடைக்கலநாதன் அரசாங்கம்  எமக்கு அளித்துள்ள  வாக்குறுதிகளை நிறைவேற்றத்தவறும்  பட்டசத்தில்  தான் அரசின் எந்தவொரு நடவடிக்கைக்கும்  ஆதரவு  வழங்கப்போவதில்லை  எனவும்  தெரிவித்தார்.
அத்தடன், இந்த விடயத்தில் அனைத்து தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் ஒருமித்து  செயற்படவேண்டும் என்றும் அவர்  வலியுறுத்தினார்.  
கொழும்பு - புதிய மெகசின் சிறைச்சாலையில் திரைப்படக்கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பணிப்பாளர்  கனகசபை தேசவதாசன்  சில  கோரிக்கைகளை முன்வைத்து கடந்த  ஒன்பது  நாட்களாக  உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.  
இன்று அவரை நேரில் சந்தித்து  நீராகரமளித்து  அவருடைய உண்ணாவிரதத்தை முடித்து  வைத்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து  தெரிவிக்கையிலேயே செல்வம்  அடைக்கலநாதன்  இவ்வாறு  தெரிவித்தார். 
அவர்  தொடர்ந்து  கூறியதாவது ,  
அரசாங்கம் ஆட்சிக்கு வரும் போது கடந்த அரசாங்கத்தின் கொடுங்கோல் ஆட்சியை முடிவுக்கு  கொண்டுவரும் வகையிலே அதற்கு ஆதரவை  தெரிவித்திருந்தோம். எமது  பிரச்சினைகளுக்கு  தீர்வை  இந்த  அரசாங்கம்  பெற்றுத்தரும் என  எதிர்  பார்த்தோம். அவற்றில் சில  பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மேலும் பல பிரச்சினைகளுக்கு இது வரையில் தீர்வு  காணப்படவில்லை..
ஜனாதிபதியும் மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் வேறுபட்ட திசைகளில் பயணிப்பதே  இதற்கு காரணமாகும் என அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages