நிலங்களை ஆக்கிரமித்துள்ள வனஜீவராசிகள் திணைக்களம் ; மக்கள் விசனம் - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:Bringing news stories from Sri Lanka

STAY WITH US

test banner

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, July 14, 2019

நிலங்களை ஆக்கிரமித்துள்ள வனஜீவராசிகள் திணைக்களம் ; மக்கள் விசனம்

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் கமநலசேவை நிலயப் பிரிவுக்குட்பட்ட, தமிழ் மக்களின் பல பூர்வீக விவசாய நிலங்களை உள்ளடக்கி, வனஜீவராசிகள் திணைக்களம் சரணாலயத்திற்காக அபகரித்து வைத்துள்ளதாக அப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு அபகரிப்புச் செய்யப்பட்டுள்ள தமிழ் மக்களுக்குரித்தான பூர்வீக அறுதி உறுதி விவசாய நிலங்களுக்குள், தற்போது விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடாதென வனஜீவராசிகள் திணைக்களம் தடை விதிப்பதாகவும் விவசாயிகள் கவலை தெரிவித்தனர். இதனால் தமது வாழ்வாதாரம் பெரிதும் கேள்விக்குறியாக்கப்பட்டிருப்பதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.
இது தொடர்பில் அவர்கள் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
குறிப்பாக கோட்டைக்கேணியிலிருந்து வெள்ளைக்கல்லடி வரையான சுமார் 150 ஏக்கருக்கும் மேற்பட்ட, தமது பூர்வீக அறுதி உறுதி மானாவாரி விவசாய நிலங்களான குஞ்சுக்கால்வெளி, தீமுந்தல், பணம்போட்ட கேணி, அம்பட்டன் வாய்க்கால், வெள்ளைக்கல்லடி போன்ற வயல் நிலங்களை இவ்வாறு வனஜீவராசிகள் திணைக்களம் அபகரித்துள்ளது.
மேலும் கடந்த 2016ஆம் ஆண்டு வனஜீவராசிகள் திணைக்களம், சரணாலயத்திற்குரிய இடமென குறித்த பகுதிகளில் பெயர்ப்பலகை நாட்டி அடையாளப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இந்த நடவடிக்ககைகள், குறித்த விவசாய நிலங்களினுடைய உரிமையாளர்களான எமது அனுமதியின்றியே மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்த நடவடிக்கையினால் நாம் பெரிதும் அதிர்ப்பதிக்குள்ளாகியிருந்தோம்.
இந் நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டிலிருந்து அங்கு விவசாய நடவடிக்கை செய்யக்கூடாதென வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தடை விதிக்கின்றனர். இவ்வாறு எமது வாழ்வாதார நிலங்கள் அபகரிக்கப்படுவதனால், எமது வாழ்வாதராமானது கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.
அத்தோடு கடந்தகாலங்களில் 30 வருடத்திற்கும் மேலாக நீண்டகால இடப்பெயர்வைச் சந்தித்து, கடந்த 2011ஆம் ஆண்டு எமது பகுதிகளில் மீளக்குடியமர்ந்த நாம், எமது விவசாய நிலங்களினூடாக எமது வாழ்வாதாரத்தை முன்னேற்ற முடியும் என்ற நம்பிக்கையில் இருந்தோம். அதுவும் இப்போது பொய்த்துவிட்டது என்றே உணர்கின்றோம். என்று கவலை தெரிவித்தனர்.
மேலும் இவ்வாறு அபகரிக்கப்பட்டுள்ள எமது பூர்வீக விவசாய நிலங்களை விடுவித்து, எமது வாழ்வாதாரத்தினை மேம்படுத்த உரியவர்கள் முன்வரவேண்டுமெனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages