முஸ்லிம்கள் எதை இழந்து எதை பெற வேண்டும் ??? - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:Bringing news stories from Sri Lanka

STAY WITH US

test banner

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, July 2, 2019

முஸ்லிம்கள் எதை இழந்து எதை பெற வேண்டும் ???


- அபூ ஜாசி - 
கடந்த ஏப்ரல் 21 இடம்பெற்ற குண்டு வெடிப்போடு தேசிய அரசியலில் இடம்பெற்று வரும் அரசியல் அனாகரிகங்களினால் முழு தேசமும் அலங்கோலமாகி வந்த நிலையில் முஸ்லிம் அரசியல் தலைமைகளின் ஏகோபித்த முடிவின் படி அமைச்சுக்களை   ராஜினாமா செய்ததன் மூலமாக முழு உலகும் திரும்பிப் பார்க்க நிலைமைகள் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளன. 

இந்நிலையில் முஸ்லிம் அரசியல் தலைமைகளின் ஏக முடிவு முஸ்லிம் சமூகத்தின் கூடுதல் கவனத்தையும் ஆறுதலையும்  பெற்றுத்தந்த மிகச்சிறந்த சாணக்கியமான முடிவாகவே கணிக்கப்படுகின்றது.

அதேவேளை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களின் பெரும் பான்மை மக்களுடனான அணுகுமுறையும், ராஜ தந்திர நடவடிக்கைகளும் பெரிதும் சிலாகிக்கப் படுகின்றன. இந்நிலையில் CID இனரின் அறிக்கைகளில் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதுர்தீன், ஆளுனர்களான அசாத் சாலி மற்றும் ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் நடந்த குண்டு வெடிப்புடன் சம்பத்தப் படவில்லை என்கிற அறிக்கைகள் வெளியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிலையில், சிக்கலான தருணத்தில் கை கோர்த்து, கை கொடுத்தமையை மறந்து சில பா.உ க்கள் செயற்பட ஆரம்பித்திருப்பதானது மிக அபத்தமான  செயலாக பார்க்கப்படுவதுடன், சமூகத்தின் எல்லா தரப்பினராலும் விமர்சனங்களுக்கு உட்படுத்தப்படுவதுடன், எவ்விலக்கை நோக்கி ராஜினாமா என்கின்ற ஆயுதம் பாவிக்கப்பட்டதோ அதனை அடைந்து கொள்ளுதலில் கூட பல சிக்கல்களை ஏற்படுத்தும் என்கின்ற அபாய நிலை தோன்றியுள்ளது.

தமது வாக்கு வங்கிகளையும், தமது அறிவு சார்ந்த மேதாவித்தனத்தையும் தக்க வைக்கும் செயற்பாடுகள் இத்தருணத்தில் உயர் சுயநலம் சார்ந்த செயலாகவே கணிக்கப்பட வேண்டியுள்ளது. இவர்களை இனங்காண்பது இப்போது மக்களுக்கு மிக இலகுவானதாகும்.

ஒரு கையால் பாதுகாப்பு கவசங்களையும், மறுகையால் தேவைகளையும், உரிமைகளையும் உள்ளடக்கிய போராட்டம் ஒன்றினை முஸ்லிம் காங்கிரஸ் தலைமை முன்னெடுத்து வரும் நிலையில் இவ்வாறன செயற்பாடுகள் மிக மட்டரகமானவைகலாகவே பார்க்கப்படவேண்டியுள்ளது. இவ்வாறான நடவடிக்கைகளை தவிர்க்க பொருத்தமான தலைமை ஒன்றினை எதிர்காலத்தில் தெரிவு செய்ய வேண்டிய கட்டாயம் முஸ்லிம்களுக்கு உள்ளது.

தனிநபர் தேவைப்பாடுகள் மற்றும் கோப, தாபங்களை விடுத்து சமூகத்தின் பாதையில் ஒன்றிணைவது அனைவருக்கும் மிக அவசியமானதாகும். 

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages