Header Ads

Breaking News

முஸ்லிம்களும் பாதுகாப்பு, மற்றும் சகவாழ்வு க்காகவே நாம் ராஜினாமா செய்தோம் ; மு.கா பிரதி தலைவர் எச்.எம்.எம்.ஹரிஸ் MP


முஸ்லிம்கள் மீது திணிக்கப்படுகின்ற பயங்கர வாத அடக்குமுறைகளை இல்லாதொழித்து, முஸ்லிம்களும் பாதுகாப்பை உறுதிப்படுத்தவே நாம் ராஜினாமா செய்துள்ளோம் என பா.உ முஸ்லிம் காங்கிரசின் பிரதித்தலைவர் எச்.எம்.எம்.ஹரிஸ் அவர்கள் தெரிவித்துள்ளார். 

நேற்றைய தினம் முஸ்லிம் அமைச்சர்கள் கூட்டாக செய்துள்ள ராஜினாமா சம்பவமானது மிக உறுதியான ஒரு செயற்பாடாக பார்க்கப்படுகின்ற சந்தர்ப்பம் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு மு.கா பிரதித்தலைவர் தெரிவித்துள்ளார். 

மேலும் அவர் கருத்து வெளியிடுகையில், 

நேற்றைய ராஜினாமா தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, மற்றும் நிதி அமைச்சர் மங்கள உட்பட்ட குழுவினர் எமது ராஜினாமா தொடர்பில் ஏற்றுக் கொள்ள வில்லை. இருப்பினும் நமது மக்களின் மீதான பயங்கரவாத சந்தேகங்களை களைந்து பேரினவாத அழுத்தங்களை தவிர்க்க வேண்டிய பொறுப்பினை உணர்ந்தே நாம் இம்முடிவுக்கு வந்துள்ளோம். 

சிறுபான்மை முஸ்லிம்கள் தொடர்பாக சிங்கள மக்கள் மத்தியில் பல்வேறு பிழையான எண்ணப்பாடுகளை அரசியல் காரணங்களுக்காக சிலர் விதைத்து வருகின்றார்கள் அவர்களுக்கு நாம் தீனி போட முடியாது. ஆட்சி மாற்றம் ஒன்றிற்காக நாம் உட்காருகின்ற போது அது எமது சமூகத்தின் பாதுகாப்பு மற்றும் சக வாழ்வு தொடர்பில் மேலும் சந்தேகங்களை உருவாக்கும். அதனாலேயே நாம் இவ்விடயம் தொடர்பில் பின்வரிசை உறுப்பினர்களாக செயற்பட தீர்மானித்துள்ளோம். 

மேலும் முஸ்லிம்களின் நிலைமை குறித்தும், எமது நிலைப்பாடு குறித்தும் நாம் முஸ்லிம் நாடுகளின் அமையத்திடமும் தனிப்பட்ட நாடுகளிடமும், ஐ.நா சபை மனித உரிமைகள் சமவாயத்திடமும் பேசுவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளோம் எனவும் தெரிவித்தார். 

No comments