இலங்கை முஸ்லிம் அமைச்சர்கள் ராஜினாமா !!! - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:Bringing news stories from Sri Lanka

STAY WITH US

test banner

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, June 3, 2019

இலங்கை முஸ்லிம் அமைச்சர்கள் ராஜினாமா !!!

இலங்கை நாடாளுமன்றத்திலுள்ள முஸ்லிம் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் தமது பதவிகளை உடன் அமுலுக்கு வரும் வகையில் இராஜினாமா செய்துள்ளனர்.
அலரிமாளிகையில் இன்று முஸ்லிம் நாடாளுமன்ற பிரதிநிதிகளினால் நடத்தப்பட்ட விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த விடயத்தை ஸ்ரீலங்கா முஸ்;லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கம் தெரிவித்தார்.
பிற்பகல் 4 மணிக்கு அறிவிக்கப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பு சுமார் 6 மணியளவிலேயே ஆரம்பமாகியது.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பு ஆரம்பமாவதற்கு முன்னர், ஊடகவியலாளர்களிடம் விசேட கோரிக்கையொன்று முன்வைக்கப்பட்டது.
இந்த ஊடக சந்திப்பில் தாம் மாத்திரமே கருத்து தெரிவிப்பதாகவும், ஊடகவியலாளர்களுக்கு கேள்விகளை எழுப்புவதற்கான சந்தர்;ப்பம் மறுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்ட நிலையிலேயே இந்த ஊடக சந்திப்பு ஆரம்பிக்கப்பட்டது.
இதன்போது, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் கருத்துக்களை வெளியிட்டார்.
தமது இராஜினாமா விடயம் குறித்து, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இடம்பெற்ற சந்திப்பினாலேயே, ஊடக சந்திப்பை ஆரம்பிப்பதற்கு தாமதம் ஏற்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
தமது இராஜினாமா விடயத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இறுதியில் ஏற்றுக் கொண்டதாகவும் ரவூப் ஹக்கீம் கூறினார்.
நாட்டின் நற்பெயரை காப்பாற்றுவதற்காகவும், அப்பாவி பொதுமக்களை பாதுகாப்பதற்காகவுமே இந்த தீர்மானத்தை தாம் எட்டியதாக அவர் குறிப்பிட்டார்.
ஏப்ரல் 21ஆம் திகதி நடாத்தப்பட்ட தற்கொலை தாக்குதல் சம்பவத்தை தாம் வன்மையாக கண்டிப்பதாகவும் அவர் கூறினார்.
முஸ்லிம் பெயர்களை வைத்துக்கொண்டு, அந்த பாதகத்தைச் செய்திருப்பதால், பாதுகாப்பு படையினருக்கு ஒத்துழைப்புக்களை வழங்கி, இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களை முற்றாக ஒழிக்கும் படி தாம் வலியுறுத்தியுள்ளதாகவும் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

வன்முறை

இந்த நிலையில், இலங்கை வாழ் முஸ்லிம் மக்கள் மீது கட்டவிழ்த்துப்பட்டுள்ள வன்முறைகளை தடுப்பதற்கு அரசாங்கம் தவறியுள்ளதாகவும், தற்போதைய சூழ்நிலையிலும் வெறுப்பு பேச்சுகளை கக்குவோர் வன்முறைகளை தூண்டி விட்டுக் கொண்டிருப்பதாகவும் அவர் கவலை வெளியிட்டார்.
நாட்டில் தற்போது காணப்படுகின்ற நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர தவறும் பட்சத்தில், எதிர்காலத்தில் பாரிய வன்முறை சம்பவங்களும், பாரிய உயிரிழப்புக்கள் மற்றும் சொத்து சேதங்களும் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், இந்த பதவி விலகலின் ஊடாக, தாம் அரசாங்கத்திற்கு வழங்கிய ஆதரவை விளக்கிக் கொள்வதாக கருதக்கூடாது எனவும் ரவூப் ஹக்கீம் கூறியுள்ளார். தாம் எதிர்வரும் காலங்களில் நாடாளுமன்றத்தின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களாக செயற்பட்டு, அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
நாட்டு மக்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க அரசாங்கம் முன்வர வேண்டும் எனவும் இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனாலேயே தாம் வகித்த பதவிகளை இராஜினாமா செய்ய தீர்மானித்ததாகவும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டார்.
இதேவேளை, இலங்கை மீது நடாத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழு மீது தாம் நம்பிக்கையிழந்துள்ளதாக கூறிய ரவூப் ஹக்கீம், இந்த சம்பவம் தொடர்பில் தாம் குற்றப் புலனாய்வு பிரிவினர் மீதே நம்பிக்கை கொண்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் விரைவில் அடையாளம் காணப்பட்டு, சட்டத்திற்கு முன்நிறுத்தி, முஸ்லிம் மக்களின் இருப்பை உறுதிப்படுத்த வேண்டும் என நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டாக, அரசாங்கத்திடம் இன்று கோரிக்கை விடுத்தனர்.
முன்னதாக, முஸ்லிம்களின் பாதுகாப்புக்கு மிகக் கடுமையான அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளமை காரணமாக, கிழக்கு மாகாண ஆளுநர் பதவியை தான் ராஜிநாமா செய்துள்ளதாக எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா பிபிசிக்கு தெரிவித்துள்ளார்.
"இன ரீதியாக முஸ்லிம்களுக்கு கடும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதனால் நாட்டு மக்களுக்கும் கடுமையான பாதிப்பு ஏற்படும். ஏற்கனவே, முஸ்லிம்களின் சொத்துக்கள் வன்முறையின் மூலம் அழிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் மீண்டும் முஸ்லிம் சமூகத்துக்கு ஒரு அழிவு ஏற்படக் கூடாது என்பதில் நான் கவனமாக உள்ளேன்.
எனவே, முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும், அந்த சமூகத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக வேண்டியும் நான் ராஜிநாமா செய்துள்ளேன்" என்றும் ஆளுநர் ஹிஸ்புல்லா கூறினார்.
இதேவேளை, முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு ஜனாதிபதியிடம், இந்த ராஜிநாமா மூலம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் பிபிசியிடம் ஹிஸ்புல்லா மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages