ஞானசார தேரர் எவ்வாறு வெளியே வந்தார் ??? ஜனாதிபதி வெளியிட்ட உண்மைகள் - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, June 3, 2019

ஞானசார தேரர் எவ்வாறு வெளியே வந்தார் ??? ஜனாதிபதி வெளியிட்ட உண்மைகள்



ஞானசார தேரர் ஒரு பௌத்த பிக்கு. அவரை விடுதலை செய்யும்படி சிங்கள பௌத்த தலைவர்களும் மகாநாயக்க தேரர்களும் உருக்கமான வேண்டுகோளை விடுத்தார்கள்.
அத்தோடு, முஸ்லிம் மதத் தலைவர்களிடமும் மௌலவிமார்களிடமும் ஞானசார தேரரை விடுதலை செய்வதைப் பற்றி அவர்களின் கருத்தை வினவிய போது அவர்களும் அத்தேரரை விடுதலை செய்வதை எதிர்க்கவில்லை என்பதை என்னிடம் தெரிவித்தார்கள். அதற்கமையவே தேரரை விடுதலை செய்தேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவிக் கையில்,
தனிப்பட்ட ரீதியிலும் நாட்டின் அமைதியைப் பாதுகாக்கும் வகையிலும் செயற்படும்படியும் அப்படி நடந்து கொள்ளாவிட்டால் மீண்டும் அவரை கைது செய்ய நேரிடும் என்பதையும் அவரிடம் நான் அறிவுறுத்தியி ருக்கின்றேன்.
அவரின் விடுதலை மோதல்களுக்கு வழிவகுக்கக்கூடும் என சிலர் கருத்துத் தெரிவிக்கின்றார்கள். ஆயினும் மோதல்களைத் தவிர்த்து சகலரும் ஒற்றுமையாக வாழக்கூடிய ஒரு சமூகத்தை உருவாக்குவதே எமது எதிர் பார்ப்பாகும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages