இன்றைய முஸ்லிம் சமூகத்தின் அடையாளம் ரவூப் ஹக்கீம் ; அன்வர் நௌஷாத் - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:Bringing news stories from Sri Lanka

STAY WITH US

test banner

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, June 18, 2019

இன்றைய முஸ்லிம் சமூகத்தின் அடையாளம் ரவூப் ஹக்கீம் ; அன்வர் நௌஷாத்

- ஏ.எல்.ரமீஸ் -

பலமானவர்களால் பலவீனமானவர்கள் நசுக்கப்படும் போது தான் சார்ந்த சமூகத்தை பாதுகாக்க கையாளும் வழிமுறைகளிலே ஒரு தலைவனின் ஆளுமை வெளிப்படுகின்றது என  முஸ்லிம் காங்கிரஸின் கல்குடா தொகுதி இணைப்பாளர் எம்.ஜே.எம்.அன்வர் நௌஷாட் தெரிவித்தார்.


இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே இதனை அவர் தெரிவித்தார்.

அன்வர் நௌஷாட் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் இன்று இரண்டு பேரினவாதிகளின் அடக்கு முறைக்கும் நெருக்குவாரங்களுக்கும் சிறுபான்மை முஸ்லிம்கள் அகப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.இதற்கு பல்வேறுபட்ட காரணிகள் இருந்தாலும் முஸ்லிம் அரசியல் தலைமைகளின் செயற்பாடு பிரதான பங்காற்றுகின்றது.பெரும்பான்மையான சமூகங்கள் வாழும் ஒரு நாட்டில் சிறுபான்மை சமூகத் தலைவர்கள் எப்படி நம் சமூகத்தை வழிநடாத்த வேண்டுமென்பதில் தெளிவில்லாத சிந்தனைகளால் பல விபரிதங்கள் நடந்து கொண்டிருக்கின்றது.வாக்குகளை குறிக்கோளாக வைத்துக் கொண்டு அரசியல் செய்ய முற்பட்ட சமூகமாக நாம் மாறிவிட்டோமா? என்ற அச்சம் நம்மை பீதிகொள்ள வைத்துள்ளது.பெரும் தலைவர் அஷ்ரப் அவர்களின் மறைவுக்கு பிற்பாடு ரவூப் ஹக்கிமின் ஆளுமைக்கெதிராக நமது குறுநில மன்னர்கள் பேரினவாதிகளின் ஆசிர்வாதத்தோடு எதிர்த்ததன் மூலமே நமக்கெதிராக இன்று பேரினவாதம் அறுவடை செய்து கொண்டிருக்கின்றது.ஒரு மனிதனால் தாங்கிக் கொள்ள முடியாத விமர்சனங்களை அள்ளி வீசிய போதும் தன்னுடைய அரசியல் இயங்கு நிலையிலிருந்து ஒரு போதும் பின்வாங்காமல் தன் ஆளுமைக்குட்பட்டே இவ் விமர்சனங்களை ஹக்கிம் பார்த்தார்.அன்று ரவூப் ஹக்கிமை வீழ்த்த முற்பட்டவர்கள் இன்று அவரின் ஆளுமைக்குப்பின்னால் மறைந்திருக்கின்ற சூழலை இறைவன் மாற்றியமைத்துள்ளான்.காட்டிக் கொடுத்து பழிவாங்கும் மனநிலையில் செயற்பட்ட அரசியல் வியாபாரிகள் இவரின் மனிதபிமான அனுகுமுறையினால் கட்டவிழுந்து போய்யுள்ளனர்.முஸ்லிம்களின் உரிமைசார் அரசியலை கையாளும் தலைமை ரவூப் ஹக்கிமுக்குத்தான் உள்ளது என்பதை எல்லோரும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.தமது சமூகத்திற்கு ஏற்பட்டிருக்கும் மோசமான சூழ்நிலையை எப்படி கையாளுவது. எங்கு நெகிழ்ந்து கொடுப்பது எந்த இடத்தில் இறுக்கிப் பிடிப்பது என்பதில்தான் ரவூப் ஹக்கிமின் கையாளுகையின் வெற்றி தங்கியிருந்தது என அன்வர் நௌஷாட் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages