NTJ பெயரில் எச்சரிக்கை ; அனுப்பியவர் பிரதீப் - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:Bringing news stories from Sri Lanka

STAY WITH US

test banner

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, May 5, 2019

NTJ பெயரில் எச்சரிக்கை ; அனுப்பியவர் பிரதீப்



யாழ்ப்பாணம் சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு பயங்கரவாத அமைப்பு ஒன்றின் பெயரில் எச்சரிக்கைக் கடிதமொன்று, அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.


தேசிய தௌஹீத் ஜமாத் – யாழ். மாவட்டம் என பெயரிடப்பட்ட இந்தக் கடிதம் தபால் ஊடாக அனுப்பிவைக்கப்படதாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது, 
"இந்த தேசம் அல்லாவின் தேசம். இங்கு இஸ்லாமிய மக்கள் மட்டுமே வாழ முடியும். இது எமக்கான புனித பூமி. உங்களைப் போன்ற சிலுவை தூக்கிகளோ வேறு யாருமோ வாழ முடியாது. வாழ விடவும் மாட்டோம். அத்தோடு, 8.5.19 அன்று பாடசாலையில் குண்டு வைப்போம். எல்லா சிலுவை தூக்கி மாணவர்களையும் கொல்லுவோம். அல்லா மேல் ஆணை. எல்லாப் பாடசாலைகளும் குண்டு வைக்க ஜிகாதிகள் வந்துள்ளோம். இன்சா அல்ல, எங்கள் குடும்பத்தை அல்லா காப்பாற்றுவார்" என்பதாகும்.
இக்கடித்தத்தின் எழுத்து நடை மற்றும் சொற்பிரயோகம் என்பன முஸ்லிம்களோடு சம்பந்தம் இல்லாத நிலையில் தனிப்பட்ட தேவையோன்ருக்காக அல்லது புதிதாக தலையெடுக்கும் குழு ஒன்றின் முயற்சியாக இருக்கலாம் எனவும் சந்தேகிக்கக்ப்படுகின்றது. 
மேலும், இக்கடிதம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடதக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages