புலனாய்வுகளின் தோல்விக்கு அரசாங்கமே காரணம் ; கோத்தபாயவிடுதலைப் புலிகளை ஒழிக்க முடிந்த எமது புலனாய்வுப் பிரிவுக்கு ஏன் தற்போது எழுந்துள்ள பயங்கரவாதத்தை கண்டறிய முடியாமல் போனதற்கு அரசாங்கமே காரணம் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய நேர்காணலிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.

 இந்த தாக்குதல் குறித்து புலனாய்வு தகவல் கிடைக்கப்பெற்றும், தகவல் பரிமாற்றப்பட்டும் இவ்வாறான அசம்பாவிதம் நடந்தமைக்கு அரசாங்கம் தேசிய பாதுகாப்புக் குறித்து முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்பதே காரணம். இது குறித்த அறிவின்மையே காரணம். 

தேசிய புலனாய்வு சேவை அடுத்ததாக குற்றத் தடுப்பு பிரிவு உள்ளது. அதற்கும் அடுத்ததாக பாதுகாப்பு படைகளின் புலனாய்வு பிரிவும் உள்ளது.இவற்றில் இராணுவ புலனாய்வு பிரிவுதான் சிறந்த பலமான அமைப்பாகும். தேசிய புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றிய பலரும் இராணுவத்தினர். 
இவர்களை கொண்ட கடந்த காலத்தில் வெற்றிகரமாக எம்மால் செயற்பட முடிந்தது.

எனினும் இந்த ஆட்சியில் இவை பலவீனமாக்கப்பட்டுள்ளது.புலனாய்வு பிரிவினர் பலர் கைது செய்யப்பட்டனர். மனதளவில் அவர்களை பலவீனப்படுத்தினர், அரசாங்கமே இது குறித்து கருத்திற்கொள்ளாத நிலையில் அவர்களின் சேவையை பெற்றுக்கொள்ள முடியாது, இதுவே காரணம். 

சில அதிகாரிகள் மூலம் தவறுகள் இடம்பெற்றுள்ளது. ஆனால் அரசாங்கத்தின் செயற்பாடே பிரதான காரணமாகும்.ஒரு அதிகாரி மீது பிழைகூறமுடியாது. பலபேர் இதற்கு முக்கியத்துவம் கொடுக்காதது ஏன் என்ற கேள்வியை கேட்க வேண்டும். 

ஒரு தகவலைக் கொண்டு அவர்களை கணிக்க முடியாது. நீண்ட காலமாக இது குறித்து ஆராய வேண்டும். அவ்வாறு செய்யாதது ஏன் என்பதையே ஆராய வேண்டும். தமிழீழ விடுதலைப் புலிகளை ஒழிக்க முடிந்த எமது புலனாய்வு பிரிவுக்கு ஏன் இதனைக் கண்டறியமுடியாது போனது என குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments