மாணிக்ககல் திருட்டு தொடர்பில் மற்றொரு சந்தேகநபர் கைதுமஹரகம – எருவல பகுதியில் மாணிக்ககல் மற்றும் வைரக்கல் திருடிய சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திட்டமிட்ட குற்றச்செயல்கள் தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மீபே பகுதியில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திருடப்பட்ட வைரக்கல்லின் பெறுமதி 500 கோடி ரூபா என்பதுடன், மாணிக்ககல்லின் பெறுமதி 200 கோடி ரூபாவாகும்.
இதேவேளை, வைரம் மற்றும் மாணிக்கல்லை திருடியமை மற்றும் வௌிநாட்டு பிரஜையொருவரை கடத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் பாதுக்க பகுதியை சேர்ந்த 28 வயதான குறித்த சந்தேகநபர் மீது முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments