Header Ads

Breaking News

தேசிய தௌஹீத் ஜமாத்தின் கொழும்பு அமைப்பாளருக்கு தொடர்ந்து விளக்கமறியல்


தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் கொழும்பு மாவட்ட அமைப்பாளரான மொஹமட் பாருக் மொஹமட் பவாஸை எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேக நபர் வாழைத்தோட்டம் பொலிசாரால் 72 மணிநேரம் தடுப்பு காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் மீண்டும் நேற்று புதன்கிழமை கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
அத்துடன் குறித்த நபர் தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் கொழும்பு மாவட்ட அமைப்பாளராக செயற்பட்டுள்ளமை விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளதாக பொலிசார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை , சந்தேக நபரிடமிருந்து தேசிய தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்புடன் தொடர்புடைய ஆவணங்கள் மற்றும் கானொலிகள் என்பன கைப்பற்றப்பட்டதால் அது தொடர்பில் மேலதிக விசாரணைகளை நடாத்த வேண்டும் என பொலிசார் நீதிமன்றில் கோரியுள்ளனர்.
அதற்கமைய சந்தேக நபரை எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments