ஊடகங்கள் முஸ்லிம்களை இழிவு படுத்த வேண்டாம் ; ராஜாங்க அமைச்சர் அமீர் அலி - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:Bringing news stories from Sri Lanka

STAY WITH US

test banner

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, May 18, 2019

ஊடகங்கள் முஸ்லிம்களை இழிவு படுத்த வேண்டாம் ; ராஜாங்க அமைச்சர் அமீர் அலிஎஸ்.எம்.எம்.முர்ஷித்இலங்கையிலுள்ள ஊடகங்கள் தர்மத்தோடு செயற்பட வேண்டுமே தவிர, தயவு செய்து சமூகத்தினை இழிவுபடுத்துவதற்கான வேலைத்திட்டங்களைச் செய்ய வேண்டாமென விவாசாய, நீர்ப்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கேட்டுக்கொண்டுள்ளார்.
ஓட்டமாவடி-மீராவோடை மஸ்ஜிதுர் ரிழா பள்ளிவாயல் புனரமைப்புச் செய்யப்பட்டு தொழுகை நடவடிக்கைக்காக திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்-
தமிழ் மற்றும் சிங்கள ஊடகங்களோ அல்லது வேறெந்தவொரு ஊடகமாக இருந்தாலும் சரி, தர்மத்தோடு பேசத்தவறுமாக இருந்தால், நிச்சயமாக ஒரு சமூகம் முற்று முழுதாக வெறுத்தொதுக்குகின்ற ஊடகமாக அது மாற்றப்பட்டு விடும். அவ்வாறு இல்லையாயின், ஊடக தர்மமாக இல்லாமல் அது வேறொரு கசாப்புக்கடையாக இருக்கும்.
ஒரு கத்தியைக்கண்டுபிடித்தால் அல்லது பள்ளிவாயலில் கத்திகள் எடுத்தால், அதனைப்பெரிதுபடுத்தி பூதாகரமாக்குகின்றனர். இந்நாட்டில் சமையலறையில் பாண் வெட்டும் கத்தியைக்கூட பயத்தில் வீதியில், ஆற்றில் வீசுகின்ற துர்ப்பாக்கிய நிலைக்குத்தள்ளப்பட்டமை ஊடகங்கள் இதனைப்பெரிதுபடுத்தி அச்சமூட்டிய காரணத்தினால் தான்.
இந்நாட்டிலுள்ள ஊடகங்கள் தர்மத்தோடு செயற்பட வேண்டும். தயவு செய்து சமூகத்தினை இழிவுபடுத்துவதற்கான வேலைத்திட்டங்களைச் செய்ய வேண்டாமென்று கேட்டுக்கொள்கின்றேன். ஒரு சிறுபான்மைச்சமூகத்தினை இழிவுபடுத்துகின்ற, அச்சுறுத்துகின்ற, பயப்படுத்துகின்ற பண்பை ஒரு ஊடகம் செய்யக்கூடாதென்பது எங்களது வினயமாக வேண்டுகோளாகும்.
பாராளுமன்றத்தில் மூத்த பாராளுமன்ற உறுப்பினர்களின் புதல்வர்கள் எங்களிடத்தில் சொல்கிறார்கள். உங்களுக்கு இந்த நாட்டில் வாழ முடியாதென்று சொன்னால், வேறெங்காவது சென்று விடுங்கள் என்று கூறுகின்றனர். நாங்கள் எங்கு செல்வது? இதற்கு என்ன பதிலை வழங்க முடியும்?
முஸ்லிம் சமூகத்திலிருந்து விரல் விட்டு எண்ணுமளவிலுள்ள ஒரு சிலர் செய்த இச்செயலுக்காக ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தின் மீதும் பழியைச்சுமத்தாமல் சங்கடத்திற்குள்ளாக்காதீர்கள் என்ற செய்தியை பெரும்பான்மைச் சமூகத்தினரிடம் நாங்கள் சொல்ல வேண்டுமென்றார்.
மீராவோடை மஸ்ஜிதுர் ரிழா பள்ளிவாயல் தலைவர் எம்.எல்.எம்.சபூர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், ஓட்டமாவடி பிரதேச சபை முன்னாள் தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட், இராஜாங்க அமைச்சரின் இணைப்பாளர் எம்.எஸ்.எம்.றிஸ்மின், வட்டாரக்குழு உறுப்பினர்கள், பள்ளிவாயல் நிருவாகிகள், பொது மக்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.
இதன் போது பள்ளிவாயல் பேஷ் இமாம் மௌலவி ஆதம் லெப்பை அப்துல் ஹமீதினால் தொழுகை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு, நாட்டின் நல்லாசி வேண்டி துஆப்பிரார்த்தனை இடம்பெற்றது.
இராஜாங்க அமைச்சரின் கம்பெரலிய திட்டத்தின் பதினைந்து இலட்சம் ரூபாய் நிதியொதுக்கீட்டில் பள்ளிவாயல் புனரமைப்புச் செய்யப்பட்டு தொழுகை நடவடிக்கைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages