Header Ads

Breaking News

அக்கரைப்பற்று பிரதி மேயர் அஸ்மியின் முன்மாதிரி




சப்ரறாஸ்
அக்கரைப்பற்று மாநகர சபைத் தேர்தலில் ஹிஜ்ரா வட்டாரத்தில் தேசிய காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு அதி கூடிய வாக்குகளைப் பெற்ற ஏ.ஜி.அஸ்மி அவர்கள் மாநகர சபையின் பிரதி மேயராக அக்கட்சியின் தலைவர் ஏ.எல்.எம்.அதாஉல்லாவினால் நியமிக்கப்பட்டிந்தார்.

தேசிய காங்கிரஸில் மூத்த உறுப்பினர்கள் இருந்த போதும் கட்சி விசுவாசம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டே இவ் நியமனம் கட்சியின் தலைவரால் வழங்கப்பட்டிருந்தது.



இருந்த போதும் குறித்த பதவியானது ஒரு வருடகாலத்திற்கு பிற்பாடு வேறு ஒரு உறுப்பினருக்கு வழங்க வேண்டுமென்ற வாய்மூல ஒப்பந்தம் இடப்பட்டடிருந்தது.

பிரதி மேயராக பதவி வகித்துவந்த அஸ்மி அப்துல் கபூர் தனது பதவிக்காலம் ஒரு வருடத்தை தொடுவதற்கு முன்பாகவே கட்சியின் தலைவருக்கு கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில் கடந்த மார்ச் மாதம் 13ம் திகதி தனது பதவி விலகும் கடிதத்தை கட்சியின் தலைமையிடம் ஒப்படைத்திருந்தார்.
பதவி விலகல் தொடர்பாக எந்த அறிவித்தலையும்; கட்சித் தலைதை விடுக்காத போதும் தான் வழங்கி வாக்குறுதியை நிறைவேற்றியது எல்லோரையும் ஆச்சிரியப்படுத்தியுள்ளது.

பிரதி மேயர் அஸ்மியின் விலகல் கடிதம் கிடைத்தும் கூட கட்சி இதுவரை எந்த தீர்மானத்தையும் மேற்கொள்ளவில்லை.

இப்படியான நிலையில் வேறு சில கட்சிகள் தங்களது உறுப்பினர்களுக்கு ஒரு வருடம் மற்றும் ஆறு மாதங்கள் என வாக்குறுதிகளின் அடிப்படையில் பதவிகள் வழங்கப்பட்டிருந்த நிலையில் கட்சியின் தலைமையினால் இராஜினமா செய்யுமாறு கோரியும் இதுவரையும் அந்த உறுப்பினர்கள் பதவியை இராஜினமா செய்ய மறுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

No comments