தமிழீழ புலிகளின் தற்கொலைக் குண்டினால் ஜனாதிபதி பிரேமதாச கொல்லப்பட்டு 26 வருடங்கள் - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:Bringing news stories from Sri Lanka

STAY WITH US

test banner

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, May 1, 2019

தமிழீழ புலிகளின் தற்கொலைக் குண்டினால் ஜனாதிபதி பிரேமதாச கொல்லப்பட்டு 26 வருடங்கள்


மறைந்த முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் 26 ஆவது ஞாபகார்த்த நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று முற்பகல் கொழும்பு புதுக்கடையில் அமைந்துள்ள ரணசிங்க பிரேமதாசவின் திருவுருவச் சிலையின் முன்னிலையில் இடம்பெற்றது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய, சஜித் பிரேமதாச ஆகியோர் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் ஹேமா பிரேமதாச உள்ளிட்ட குடும்ப உறவினர்களும் இந் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.
மறைந்த முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசவின் உருவச்சிலைக்கு ஜனாதிபதி மலரஞ்சலி செலுத்தியதனைத் தொடர்ந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய, ஹேமா பிரேமதாச மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோர் மலரஞ்சலி செலுத்தினர்.
கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமக்ரி தர்ம சங்க சபையின் மகாநாயக்கர் சங்கைக்குரிய கலாநிதி இத்தேபானே தம்மாலங்கார தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினர் இந்நிகழ்வில் கலந்துகொண்டதுடன், ஜனாதிபதியினால்  மகாநாயக்கருக்கு இதன்போது பிரிகரை வழங்கி வைக்கப்பட்டது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages