பொய்யான செய்திகளைப்பரப்பி வரும் jvpnews.com, battinatham போன்றவற்றை நாம் கண்டிக்கின்றோம்.: ஜம்இய்யதுத் தஃவதில் இஸ்லாமிய்யா கல்குடா - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:Bringing news stories from Sri Lanka

STAY WITH US

test banner

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, April 27, 2019

பொய்யான செய்திகளைப்பரப்பி வரும் jvpnews.com, battinatham போன்றவற்றை நாம் கண்டிக்கின்றோம்.: ஜம்இய்யதுத் தஃவதில் இஸ்லாமிய்யா கல்குடாஎஸ்.எம்.எம்.முர்ஷித் 
கடந்த 21.04.2019ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நாட்டின் பல பாகங்களிலும் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலை ஜம்இய்யதுத் தஃவதில் இஸ்லாமிய்யா கல்குடா வன்மையாகக் கண்டிக்கின்றதென அதன் பொதுத்தலைவர் அஷ்ஷெய்க் ஏ.எல்.பீர்முஹம்மத் (காஸிமி) தெரிவித்தார்.
வணக்கஸ்தலங்களில் தாக்குதல் மேற்கொள்வதும் குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள், வயோதிபர்கள் போன்றோரை யுத்தத்தில் கூட தாக்குவதும் இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டதும், மனித நேயத்திற்கும் மனித குலத்திற்கும் எதிரானதுமான செயற்பாடுகளாகும்.
இத்தாக்குதலில் மரணித்த உறவுகளின் குடும்பங்களுக்கு இலங்கை முஸ்லிம்களின் சார்பில் ஆறுதல் கூறுவதுடன், இத்தகைய தீவிரவாத சிந்தனைகள் இஸ்லாத்தில் மிகவும் கண்டிக்கத்தக்கது. கடந்த காலங்களில் இத்தகைய தீவிரவாத சிந்தனை கொண்டோரின் கொள்கைகளை நாம் வன்மையாகக் கண்டித்துள்ளோம்.
ISIS தீவிரவாதக் கொள்கையை நாம் பகிரங்கச் சொற்பாழிவுகள் மூலமும் மாநாடுகள் மூலமும் வெள்ளிக்கிழமை பிரசங்கங்கள் மூலமும் தெளிவுபடுத்தி வந்துள்ளோம். குறிப்பாக, கடந்த 2016.11.03ம் திகதி நிந்தவூரில் நடைபெற்ற பகிரங்க மார்க்கச்சொற்பொழிவிலும் இதே பிரதேசத்தில் நடந்த கிழக்கு மாகாண இஸ்லாமிய மாநாட்டிலும் மேலும், 2017.02.03ம் திகதி காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் கலாசார மண்டபத்தில் நடைபெற்ற ISIS எதிர்ப்பு மாநாட்டிலும் இவர்களது கொள்கை குறித்து தெளிவாக வெளிப்படுத்தியுள்ளோம்.
இத்தாக்ககுதல் தௌஹீத் எனும் இஸ்லாத்தின் ஓரிறைக்கொள்கையை கலங்கப்படுத்தும் நோக்கில் தொடர்பு படுத்திப்பேசப்படுகின்றது. தௌஹீத் எனும் ஓரிறைக்கொள்கையை அனைத்து முஸ்லிம்களும் ஏற்றிருக்கின்றனர்.
தௌஹீத் கொள்கையை ஏற்றுக்கொண்ட முஸ்லிம்கள் அனைவரும் இத்தாக்குதலை வன்மையாகக்கண்டிக்கின்றனர். அத்துடன், இத்தாக்குதலுடன் தொடர்புடைய குழுவினரைச் சரியாக அடையாளங்கண்டு உரிய தண்டனை வழங்க அனைவரும் ஒத்துழைக்குமாறும் வேண்டுகின்றோம்.
இப்பிரச்சினையை இலங்கையின் அனைத்து முஸ்லிம்களையும் பாதிக்கும் வகையில் ஊடகங்கள் செய்தி வெளியிடுவதையும், சில அரசியல்வாதிகள் தங்களின் குறுகிய அரசியல் இலாபங்களுக்காக இந்நிகழ்வைச் சாதகமாக மாற்றிக்கொள்வதற்கு எத்தனிப்பதையும் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
எனவே, நமது நாட்டின் பாதுகாப்பு, அபிவிருத்தி, சகவாழ்வு என்பவற்றைக் கருத்திற்கொண்டு அனைவரும் இலங்கைப்பிரஜைகள் என்ற நோக்கில் பொறுப்புடன் செயற்படுமாறு வேண்டுகின்றோம்.
இப்பயங்கரவாதத்தாக்குதல் குறித்து முழு இலங்கை முஸ்லிம்களும் மிகவும் கவலையுற்று, வேதனைப்பட்டுக்கொண்டிருக்கும் இவ்வேளையில், எம்முடன் விரோதம் கொண்ட சிலர் இப்பயங்கரவாதச் செயலுடன் எம்மைச் சம்பந்தப்படுத்திப் பேசியும் எழுதியும் வருவதுடன், இன்றைய தினம் jvpnews.com எனும் இணைய தளத்திலும். இ battinatham போன்ற இணைய தளங்களிலும் எமது புகைப்படங்களைப் பிரசுரித்து நாம் குண்டுத்தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட அரசினால் தேடப்பட்டு வரும் தீவிரவாதிகளாக அடையாளப்படுத்தி நாம் தலைமறைவாக இருந்து வருவதாகவும் தகவல்களைத் தெரிந்தவர்கள் பொலிஸ் நிலையத்தில் தெரியப்படுத்தமாறும் பொய்யான தகவல்களைப் பரப்பி வருகின்றனர்.
சிலர் சமூக வலையத்தளங்களிலும் இவற்றைப்பரப்பி வருகின்றனர். ஊடகங்கள் மிகுந்த சமூகப்பொறுப்புடனும் ஊடக தர்மத்துடனும் நடந்து கொள்ள வேண்டும். ஒரு சிலரின் விருப்பு, வெறுப்புக்களையும், காழ்ப்புணர்வுகளையும் வெளிக்கொணரும் தளமாக ஊடகங்களைப் பயன்படுத்துவது மிகவும் அநீதியாகும். இந்த வகையில், பொய்யான செய்திகளைப்பரப்பி வரும் jvpnews.com, battinatham போன்றவற்றை நாம் கண்டிக்கின்றோம்.
இந்த ஊடகங்கள் ஊடக தர்மங்களைக் கற்றுப்பணியாற்ற வேண்டும். பொய்யான தகவல்களைப்பரப்புதல், சமூகங்களுக்கிடையிலான முரண்பாடுகளை ஊக்குவித்தல் போன்ற செயற்பாடுகளை இந்த ஊடகங்கள் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும்.
இத்தகைய ஊடகங்களுக்கெதிராகவும் இவற்றுக்குப்போலியான செய்திகளை அனுப்பி வைத்து குளிர்காயும் செய்தியாளர்களான சமூக விரோதிகளுக்கெதிராகவும் இலங்கை அரசு உரிய நடவடிக்கையெடுக்க வேண்டுமென இந்தச் சந்தர்ப்பத்தில் ஜம்இய்யதுத் தஃவதில் இஸ்லாமிய்யா கல்குடா கேட்டுக்கொள்கின்றது என்றும் தெரிவித்தார்.
இவ்வூடகவியலாளர் சந்திப்பில் கல்குடா ஜம்இய்யதுத் தஃவதில் இஸ்லாமிய்யா அமைப்பில் அங்கத்தவர்களும் இணையதளத்தில் புகைப்படங்களை வெளியிட்டு குண்டுவெடிப்புடன் தொடர்புடையவர்கள் என்று கூறப்பட்டவர்களும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages