பொய்ச் செய்தி இணையத்தளங்களின் சதிவலை அம்பலம் ; யூ.எல்.அஹமட் லெவ்வை - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:Bringing news stories from Sri Lanka

STAY WITH US

test banner

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, April 27, 2019

பொய்ச் செய்தி இணையத்தளங்களின் சதிவலை அம்பலம் ; யூ.எல்.அஹமட் லெவ்வை



(எச்.எம்.எம்.பர்ஸான்)
கடந்த (21) ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நாட்டில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலானது, இலங்கைத் திருநாட்டிற்கு ஒரு அபகீர்த்தியையும் அத்தோடு, ஒட்டுமொத்த சமூகமும் கவலை கொள்கின்ற ஒரு சம்பவமாகக் காணப்படுகின்றது என கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் உப தவிசாளர் யூ.எல்.அஹமட் லெவ்வை தெரிவித்தார்.

குறித்த பயங்கரவாதச் செயலுடன் என்னைத் தொடர்புபடுத்தி jvpnews மற்றும் battinathan ஆகிய இணையத்தளங்களில் எனது புகைப்படத்தைப் பிரசுரித்து என்னை பொலிஸார் தேடி வருவதாகவும், பொது மக்கள் அவதானத்தோடு இருக்கும்படியும் அச்செய்தியில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பில் நான் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றினை பதிவு செய்துள்ளேன் என நேற்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உப தவிசாளர் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

நான் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஓட்டமாவடி பிரதேச சபையின் பிரதித்தவிசாளராக, மக்கள் சேவகனாகச் செயற்பட்டு வருகின்றேன். என் மீது கொண்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக சிலர் இவ்வாறான ஈனச்செயல்களில் ஈடுபட்டு வருகின்றமை வேதனையளிக்கிறது. நாட்டில் இடம்பெற்ற இப்பயங்கரவாதத் தாக்குதலை நாங்கள் வன்மையாகக் கண்டிப்பதோடு, சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் எங்களுடைய சபை அமர்விலும் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளோம்.

எனவே, குறித்த இணையத்தளங்கள் இவ்வாறான மோனசமான செய்திகளைப் பரப்பி முஸ்லிம் சமூகத்தை பயங்கரவாதிகளாக சித்தரிப்பதை பார்க்கும் போது கவலையாகவுள்ளது எனத்தெரிவித்தார்.

நாங்கள் பொலிசாரினால் தேடப்பட்டு வருகின்றோம் என்று அதில் தெரிவித்துள்ளார்கள். நாங்கள் எங்கேயும் ஓடவுமில்லை. ஒழியவுமில்லை. இந்தப்பிரதேசத்தில்தான் இருக்கின்றோம் என்று உப தவிசாளர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages