புர்க்காவுக்கு தடை ; ஜனாதிபதி அதிரடி

ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்த முடியாதவாறு முகத்தை மறைப்பதற்கு இன்று முதல் தடை விதிக்க ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்துள்ளார்.

தேசிய பாதுகாப்பு மற்றும் மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் அடையாளத்தை உறுதிபடுத்த முடியாதவாறு முகத்தை மறைக்க இன்று முதல் தடை விதிக்கப்படுவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

அவரகால கட்டளைகளின் பிரகாரம் ஜனாதிபதி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.பிரஜைகளின் முகம் தெரியும் வகையில் இருக்க வேண்டியதன் அவசியமே இதன்மூலம் வலியுறுத்தப்படுவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Post a Comment

0 Comments